62 குவியத் தொலைவு
62 குவியத் தொலைவு குடையவையாக இருக்கும்; எல்லையிலிருந்து உள்நோக்கிய அச்சுகள் காணப்படும். குழிவான பிற பள்ளங்கள், எந்தப் போக்கும் (trend) இன்றிக் காணப்படும். இளம் அடுக்கியற் படுகைகள் வளைவை நோக்கிக் காணப்படும். மைய அடுக்கியற்படிவு குவிபடுகைகளின் மடிப்பாகும். குவிபடுகைகளே என்பதை தகவல்களிலிருந்து இவை உண்மையான அடுக்கியற்படிவாய்வுகளின் அறியலாம். அடுக்கியற்படிவாய்வு தொடர்பற்றும், கட்டகக் குவிபடுகைகள் குவிபடுகை அமைப்புடனும் காணப் படும். இரா. சரசவாணி நூலோதி. Marland P. Billings. Structural Geology, Third Edition, Prentice Hall of India Private Ltd., New Delhi, 1987. . குவியத் தொலைவு குழியாடியின் (concave mirror) முதன்மை அச்சுக்கு இணையாகவும், நெருக்கமாகவும் செல்லும் ஓர் இணை ஒளிக்கற்றை, குழியாடியால் எதிரொளிக் கப்பட்டு முதன்மை அச்சின் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவியும். இந்தப் புள்ளி குழியாடியின் முதன்மைக் குவியம் எனப்படும். ஒரு குவியாடியின் (convex mirror) முதன்மை அச்சுக்கு இணையாகவும், நெருக்கமாகவும் செல்லும் ஓர் இணை ஒளிக்கற்றை குவியாடியால் எதிரொளிக் கப்பட்டு விரியும். இந்த எதிரொளிக் கற்றை முதன்மை அச்சின் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து விரித்து வருவது போலத் தோன்றும். அந்தப் புள்ளி குவியாடியின் முதன்மைக் குவியம் எனப்படும். குழி ஆடியில் முதன்மைக் குவியத்தில் உண்மை -யாகவே சுதிர்கள் குவிகின்றன. அது மெய்க்குவியம் ஆகும். குவியாடியில் சுதிர்கள் குவியத்திலிருந்து விரிவது போன்ற தோற்றம் மட்டுமே அளிப்பதால் அது மாயக் குவியம் ஆகும். முதன்மைக் குவியத் துக்கும் ஆடி பையத்திற்கும் (pule) இடையிலுள்ள தொலைவு ஆடியின் குவியத்தொலைவு (focal length) எனப்படும். குழி ஆடி, குவி ஆடி ஆகியவற்றில் குவியத் தொலைவு வளைவு ஆரத்தில் பாதியாக இருக்கும். மெய்க்குவியத் தொலைவு நேரினமாகவும் மாயக் குவியத் தொலைவு எதிரினமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். முதன்மைக் குவியத்தின் வழியாகச் செல்லும் அல்லது முதன்மைக் குவியத்திலிருந்து வருவது போலத் தோற்றமளிக்கும் ஒரு படுகதிர் (incident ray) கோள ஆடியில் (spherical mirror) எதிரொளிக்கப்பட்ட பின்னர். அந்த ஆடியின் முதன்மை அச்சுக்கு ணையாகத் திரும்பி வரும். ஒளி இதேபோன்று ஒரு குவிவில்லையின் முதன்னம அச்சுக்கு இணையாகவும், நெருக்கமாகவும் செல்லும் ஓர் இணை ஒளிக்கற்றை குவிவில்லையால் விலக்கப்பட்டு முதன்மை அச்சின் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவியும். அந்தப்புள்ளி குவிவில்லையின் குவியமாகும். ஒரு குழிவில்லையின் முதன்மை அச்சுக்கு இணையாகவும், நெருக்கமாகவும் செல்லும் ஓர் இணை ஒளிக்கற்றை குழிவில்லையால் ஒளி விலக்கப்பட்டு. முதன்மை அச்சின் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து விரிந்து வருவது போலத் தோன்றும். அந்தப் புள்ளி குழிவில்லை யின் குவியாகும். ஒரு வில்லையின் முதன்மைக் குவியத்தின் வழி யாகச் செல்லும் அல்லது முதன்மைக் குவியத்தி லிருந்து வருவது போலத் தோற்றமளிக்கும் ஒரு படு கதிர் வில்லையில் ஒளி விலக்கமடைந்த பின்னர் அந்த வில்லையின் முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும். முடிவிலாத் தொலைவிலுள்ள ஒரு பொருளிலிருந்து வரும் கதிர்கள் இணையாக இருக் கும். இணையாகச் செல்லும் கதிர்கள் முடிவிலாத் தொலைவில் உ உருத் தோற்றத்தை உண்டாக்கும். ஒரு பொருளை வில்லையின் முதன்மை அச்சில் எந்த ஒரு புள்ளியில் வைத்தால் அப்பொருளின் உருத்தோற்றம் முடிவிலாத் தொலைவில் அமை யுமோ, அந்தப் புள்ளி வில்லையின் முதல் முதன் மைக் குவியம் எனப்படுகிறது. முடிவிலாத் தொலை வில் இருக்கிற ஒரு பொருளின் உருத்தோற்றம் முதன்மை அச்சில் எந்த ஒரு புள்ளியில் விழுகிறதோ. அந்தப்புள்ளியை வில்லையின் இரண்டாம் முதன் மைக் குவியம் எனலாம். பொதுவாக இதுவே ஒரு வில்லையின் குவியம் எனப்படும். வில்லையின் ஒளிமையத்திற்கும், குவியத்திற்கும் டையிலுள்ள தொலைவு வில்லையின் குவியத் தாலைவு ஆகும். குவிவில்லையின் குவியத் தொலைவு நேரினமாகவும் குழிவில்லையின் குவியத் தாலைவு எதிரினமாகவும் கொள்ளப்படும். மீட்டர்களில் குறிப்பிடப்படும் குவியத் தொலை வின் தலைகீழ் மதிப்பு வில்லையின் திறன் (power | எனப்படும். வில்லையின் திறன் டயாப்டர் (dioptre) என்ற அலகால் அளக்கப்படும். ஒரு மீட்டர் குவியத் தாலைவுள்ள ஒரு வில்லை ஒரு டயாப்டர் திறனுள்ளதாகும். f₁. fg, fq மெல்லிய குவியத் தாலைவுகளுள்ள வில்லைகள் ஒன்றையொன்று தொட்டுக்