உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சயனோகார்பன்‌ 815

சயோன கார்பன் 815 (hydrophobic) பண்பு அதிகரிக்கின்றது. இதனால் இவை உயிரிகளால் பாதிக்கப்படுவது குறைகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், குறிப்பாகச் செல்லுலோஸ். சயனோ எத்திலேற்றம் செய்யப் படுவதால் இப்பண்புகள் அதிகரிக்கின்றன. இவ்வினையில் பயன்படுத்தப்படும் வினையூக்கி களைப் பொறுத்து இது பின்வருமாறு வகைப்படுத்தப் படுகிறது. (1) வினையூக்கி இல்லை; -ங்H (அலிஃபாட்டிக்), --AsH, - BH, -PH, -SnH, HBr, HCI (2) காரவினையூக்கி (NaOH, Na O C B, பென்சைல் டிரைமெத்தில் அம்மோனியம் ஹைட்ராக்சைடு); - ~CH, —NH (அமைடு) - OH - PH, - P(O)H, -SH, HCN (3) அமில வினையூக்கி (அசெட்டிக் அமிலம், தாமிர சல்ஃபேட் சேர்த்து அல்லது சேர்க்காமல்). (அரோமாட்டிக்), NH2 ( மூவிணைய கார்பின்மைன் கள்). -NH சயனோ எத்திலேற்றத்தால் விளையும் பொருள் களின் அளவு மிகுதியாக இருக்கும். இவ்வினை ஒரு வெப்பம் உமிழ்வினை ஆகும். எனவே இவ்வினை டைஆக்சேன் அல்லது மூவிணைய பியூட்டனால் கரைப்பானில் குறைந்த வெப்பத்தில் நிகழ்த்தப்படு கிறது. ஆறில் ஒரு பங்களவு ஹைட்ராக்சில் தொகுதி கள் சயனோ எத்திலேற்றப்பட்ட செல்லுலோஸ், அமில-காரங்களாலும், நீரினாலும் பாதிப்படைவ தில்லை. இதனால் செல்லுலோசின் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. இது மீன்பிடி வலைகள், மின்காப்புகள் (insulations), தொழிலக நூல் இழை கள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகின்றது. பருத்தியைச் சயனோ எத்திலேற்றம் செய்யும் முன்னர் 6% சோடியம் ஹைட்ராக்சைடில் முக்கி எடுத்த அக்ரிலோ-நைட்ரைல் கரைசலில் வைக்க வேண்டும். பின்னர் 75°C வெப்பத்தில் இருக்கும் அறையுள் செலுத்தப்பட்டு அக்ரிலோ நைட்ரைல் ஆவி அதில் உட்செலுத்தப்படுகிறது. 3.5 நிமிடத்திற்குப் பிறகு நடுநிலையாக்கப்பட்டு, கழுவி, தூய்மையாக்கி உலர்த்தப்படுகிறது. அதிக அளவில் சயனோ எத்திலேற்றப்பட்ட செல்லுலோஸ் (மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்குமேல் ஹைட்ராக்சில் தொகுதிகள் அக்ரிலோ நைட்ரைலுடன் வினைபுரிந்து பிணைவது) படிக் உருவமற்ற வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும். இது அக்ரைலோ நைட்ரைல், டைமெத்தில் ஃபார்ம மைடு, பிரிடின் ஆகியவற்றில் கரைகிறது. முனை வுடைய சயனோ எத்தில் தொகுதிகள் தடைப் படாமல் சுழல்வதால் அச்சேர்மத்தின் மின் காப்பு மாறிலி (dielectric constant } அதிகரிக்கிறது. ஸ்டார்ச்சை சயனோ எத்திலேற்றம் செய்வதால் அதன் நீரில் கரையும் தன்மை மாறுவதில்லை. இது கழுவப்பட்ட துணிகளில் மீண்டும் மண் ஒட்டுவதைத் தடுக்கிறது. அதிக அளவில் சயனோ எத்திலேற்றம் பெற்ற ஸ்டார்ச் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. சயனோ எத்தில் சுக்ரோசும் முனைவுடைய பாய்ம மாகும். புரோட்டீன்களைச்சயனோ எத்திலேற்றம் செய் யும்போது அமிடோ தொகுதிகள் தாக்கப்படுகின்ற றன. சயனோ எத்திலேற்றம் செய்யப்பட்ட கம்பளி நேரயனிச் சாயங்களையும் நேரடிச் சாயங்களையும் கவர்ந்திழக்கிறது. சயனோ எத்திலேற்றம்; அமினோ அமிலங்கள், சாயங்கள், நீள்தொடர் டைஅமீன்கள், முக்கிய சிலிக்கோன்கள் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. சயனோ கார்பன் . த.தெய்வீகன் இது ஹைட்ரோகார்பன் வழிச் சேர்மங்களில் ஒன்று. இதில் ஹட்ரோகார்பனில் உள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களும் சயனைடு - C=N தொகுதி யால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். 1958 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இரண்டு சயனோ கார்பன்கள் மட்டுமே தொகுக்கப்பட்டிருந்தன. அவை ஹெக்சா சயனோ எத்தேன். ஹெக்சா சயனோபென்சீன் ஆகியன. மேற்காணும் வரையறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. வரையறைக்கு விதிவிலக்காகப் பல உள்ளன. எ.கா: டெட்ராசயனோ எத்திலீன் ஆக்சைடு, டெட்ராசயனோ தயோஃபீன், டெட்ரா சயனோ பைரோல், டெட்ராசயனோ டைத்தின், பென்டாசயனோ பிரிடின், டைஅசோ மெலோனோ நைட்ரில், டெட்ராசயனோ வளைய டைஅசோ பென்டாடையீன் ஆகியன. டெட்ராசயனோ எத்திலீன் என்பது ஓர் எளிய சயனோகார்பன் ஆகும். இது நிலைத்த நிறமற்ற திண்மம். இதன் உருகுநிலை 198-200°C. அரோ மாட்டிக் அமைப்புகளுடன் எளிதில் நிலைத்த அணைவுச் சேர்மங்களைத் தருகிறது.இந்த அணைவுச் சேர்மங்கள் கட்புலன் அருகில் (near visible region) கதிர்களை உறிஞ்சும் இயல்புடையவை. N C. N=C C N CEN டெட்ராசயனோ எத்திலீன்