870 சனி
870 சனி நூற்றாண்டில் மரச்சட்டங்களும் சன்னலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதே சமயத்தில் மடக்குப் பலகணிகளுக்குப் (casement window) பதிலாகச் சறுக்குச் சட்டக் கண்ணாடிப் பலகணிகள் sash window) நடைமுறைக்கு வந்தன. நவீன கட்டடக் கலையில் கண்ணாடிகளே சன்னல்களுக்கு மிகுதி யாகப் பயன்படுகின்றன. ரா சரசவாணி படம் 2 படம் 3 படம் 2. பதினெட்டாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற வில் போன்ற அமைப்புடைய சன்னல்: படம் 3. வட்ட வடிவச் சன்னல் சனி சூரிய மண்டலக் கோள்களுள் எழில்வாய்ந்தது சனி ஆகும். இதன் ஏழில் வெற்றுக் கண்ணுக்குத் தெரிவ தில்லை. தொலைநோக்கி கொண்டு இதன் தனிச் சிறப்பான, இதைச் சுற்றி அமைந்த மூன்று அழகிய தங்க மயமான வட்ட வளையங்களைக் காணலாம். வியக்கும் வகையில் காட்சி தரும் இவ்வளையங்கள் சனியின் நடுவரைத்தளத்திலே அமைந்துள்ளன. சனி, வியாழனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கோளாகும். சூரியனிலிருந்து இதன் சராசரிதொலைவு 9.54 வானியல் அலகுகள். இதன் சுற்றுப்பாதை சூரியப் பாதையுடன் கொண்ட சாய்வு கோணம் 2.58. அதன் நீள் தகவு 0.06, இக்கோள் பரப்பின் வெப்பநிலை 150°C. வியாழனுடன் இது பல வகையில் ஒத்து இருக்கிறது. ஆகிய 3 இதன் நடுவரைவிட்டம் 1,20,00 கி.மீ; புவி யைப்போல 91 மடங்கு பெரியது. இதன் அடர்த்தி 706 கி. கி/மீ ஏனைய கோள்கள், துணைக் கோள்களைவிட இதன் அடர்த்தி மிகக் குறைவாகும். வியாழனைப்போல இக்கோள் ஹைட்ரஜன், ஹீலியம் இரண்டு வளிமங்களையும் தன் முதன்மைத் தொகுப்பாகப் பெற்றிருக்கும். இதன் மையத்தில் உலோக ஹைட்ரஜன் அணுத்திரள் அடுக்குகளால் சூழப்பட்ட சிலிகேட் படலம் அமைந்திருக்கும். இதன் விட்டம் 20,000 கி.மீ: புவி நிறையைப் போல இது 3/4 மடங்கு நிறையுடையது. மையத்தில் அமைந்த இப்பாறைப் படலத்தைச் சுற்றி 5000 கி.மீ. தடிமனுக்குப்பனிக்கட்டி அடுக்குப்படலம் இருக்கலாம். இதற்கு அடுத்து உலோக ஹைட்ரஜன் அடுக்கு 8000 கி.மீ. தடிமன் உடையது. இவ்வடுக்கு வியாழனில் உள்ளது போலல்லாமல் மிகச் சிறியதாக உள்ளது. அக்கோளின் மீப்பெரு பகுதி ஹைட்ரஜன் அணுத்திரள்களால் ஆனது. திரவ கதிர்வீச்சு ஆய்வுகள் வாயிலாகச் சூரியனி லிருந்து பெறுவதுபோல் 3-34 மடங்கு ரேடியோக் கதிர் வீச்சு உடையது. மூலம் வெப்பத்திற்கு அடுக்கு வெப்ப உள் உள்ளது. உள் களின் உள்ளே நகர் ஓட்டமே காரணமாகும்.