குழல் வடிவமைப்பு 75
நீள் அச்சிற்குக் குறுக்குப் போக்கில் அமைந்து குதிரை முகம் போன்ற அமைப்பைத் தருவதால் இப்பெயர் பெற்றது. உடல், வலுவுள்ள எலும்பு வளையங் களால் சூழப்பட்டது. இதன் வால் பற்றும் தன்மை யுடையது (prehensile). மேலும் வாலில் துடுப்பு இல்லை என்றாலும் முதுகுத்துடுப்பு உண்டு. பொது வாக இது சாம்பல் நிறமானது. சுமார் 30 செ.மீ. வரை வளரக்கூடியது. அ. சங்கரன் நூலோதி. Day. F. The Fishes of India, tVol 1 & If), William Dawson & Sons Ltd., London, 1958: Norman J.R, A History of Fishes, Ernest Benn Ltd., London, 1963; Young J.Z, The Life of Vertebrates, IInd Edn., Oxford University press, London. 1962 குழல் முள்தோலிகள் குழல் முள்தோலிகள் உலகெங்கும் பரவிக் காணப்படு கின்றன. இவ்வுயிரிகளில் ஏறத்தாழ 5, 000 இனங்கள் காணப்படுகின்றன. முள்தோலி கள் அனைத்துமே கடலில் மட்டும் வாழ்கின்றன. ஐங்கோண ஆரச்சமச்சீர் அமைப்பு, தலை இல்லாமை புறத்தே முள்களாலான புறச் சட்டகம், அகத்தே சுண்ணாம்புக் கூட்டுப் பொருள்களாலான அகச் சட்டகம் ஆகிய தனிப்பண்புகளால் குழல் முள்தோலி களின் உடற்குழியினை அடையாளம் காணமுடியும். பெரும்பான்மையான பகுதி பல கால்வாய்களாலான நீரோட்டத் தொகுதியால் நிரப்பப்பட்டுள்ளது. இவ் வுயிரிகளின் தனித்தன்மை இவற்றின் இழப்பு மீட்டல் திறனாகும். புறத்தோற்றத்தின் அமைப்பால் இவற்றைக் கடல் வெள்ளரிகள் எனக் குறிப்பிடுவர். உடலின் கீழ்ப்புற முனையில் வாயினையும், மேற்புறப் பின் முனையில் மலவாயினையும் கொண்டுள்ளன. இரு பக்கச்சமச்சீர் அமைப்புடையவை. வயிற்றுப்புறத்தில் பல குழாய் வடிவக் குழல் பாதங்கள் காணப்படு கின்றன. இக் குழல் பாதங்கள் இவற்றின் இயக்கத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. தோலின் வெளிப்புறத்தில் முள்கள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. வாயைச் சுற்றிலும் 15-30 உணர் நீட்சிகள் காணப்படு கின்றன.சில பொத்தான் வடிவிலும், சில சக்கர வடிவிலும், சில நாற்கொம்பு வடிவிலும், சில கோபுர வடிவிலும் காட்சியளிக்கின்றன. இவ்வுருவமைப்புகள் அனைத்தும் பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படு கின்றன. தொண்டைப்பகுதியில் காணப்படும் வளை யங்கள் தசைகளின் இணைப்பிற்குத் துணை புரிகின்றன. குழல் வடிவமைப்பு 75 இவ் செரிமானத் தொகுதி ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் வாய்த்துளை, வாயறை, அகன்ற உணவுக்குழல், இரைப்பை, நீண்ட சுருண்ட சிறுகுடல், இறுதியில் பொதுக் கழிவுப்புழை ஆகியவை அடங்கும். இக்கழிவுப் புழையுடன் இரு நீண்ட குழாய்வடிவ, பல கிளைகளையுடைய சுவாச மரங்கள் எனப்படும் உறுப்புகள் காணப்படுகின்றன. இவற்றின் உணவு மணலில் கலந்துள்ள நுண் புழுக்களாகும். இந்நுண்ணுயிரிகள் உணர் நீட்சிகளின் உதவியால் வாய்க்குள் தள்ளப்படுகின்றன. உணர் நீட்சிகளில் சுரக்கப்படும் ஒரு வகைச் சுரப்புநீரின் உதவியால், நுண்ணுயிரிகளை ஒன்றாகப் பிணைத்து வாய்க்குள் அனுப்புவதற்கு இயலுகிறது. கழிவுப் புழையுடன் இணைந்து காணப்படும் சுவாச மரங்களோடு, கிளைகளற்ற சிறிய குழாய்களாலான மற்றொரு சிறப்புறுப்பும் காணப்படுகிறது. வுறுப்பு குவீரியன் உறுப்பு எனப்படும். இவ்வுறுப்பு எதிரிகளின் அச்சுறுத்தலையும், தாக்குதலையும் சமாளிக்கிறது. எதிரிகளால் தாக்கப்படுங்கால், இவ் வுறுப்புகள் உடனடியாக வெளித்தள்ளப்படுகின்றன. அப்போது இவ்வுறுப்புகள் நீரினை உறிஞ்சிக் காண்டு ஒருவகையான நூல் போன்ற ஒட்டிக் காள்ளக்கூடிய உறுப்புகளைத் தோற்றுவித்து அவற்றின் உதவியால் எதிரிகளை ஒன்றாகப் பிணைத்து அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றன. குழல் முள்தோலிகள் இழந்த உறுப்புகளை மீட்கும் திறனுள்ளவை. இதை இழப்பு மீட்டல் ன்பர். இவற்றில் ஆண் பெண் உயிரிகள் பாகுபாடு உண்டு. வளர்ச்சியின் இறுதியில் ஆரிக்குரிலேரியா எனப்படும் வேற்றிளவுயிரிப் பருவம் காணப்படுகிறது. அதாவது ஃபைராஸ்டர் எனப்படும் ஒருவகை மீனினம் இதன் கழிவுப்புழையில் ஒட்டிக் கொண்டு. இரண்டும் இணைந்துண்ணிகளாகக் காலங்கழிக் கின்றன. இவற்றின் இத்தனிப் பண்பு விலங்குகளின் பொதுவான உறவு முறைக்குத் தக்க எடுத்துக்காட் டாகும். இக்கடல் வெள்ளரிகள் நன்கு உலர்த்தப் பட்டுப் பக்குவப்படுத்தப்பட்டு, பெச்டிமர் என்ற சிறப் புணவாக உட்கொள்ளப்படுகின்றன. தென்னிந்தியாவில், ராமேஸ்வரம், குரூஸ்டி ஆகிய தென் கரையோரப் பகுதியில், ஸ்டிகோபஸ். தையோன், சோவஸ், ஃபில்லோ ஃபேராள். குகுமேரியா ஆகிய இனங்கள் காணப்படுகின்றன. இவை மணலுடன் கலந்த நிலையிலும், சேற்றில் புதைந்தும் காணப்படுகின்றன. குழல் வடிவமைப்பு அறுவை -பி. இராதா முறைப்படி நாளங்களை மாற்றி யமைக்கும் உத்தியாகும். சிறிய நாளம் ஒன்று சேத