பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். இராதா செல்லப்பன்

129


மீராசா மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் தருவாயில், அவரிடம் "மருத்துவக் கருத்துகளைத் தமிழிலே தர வேண்டும்; மருத்துவச் செய்திகளை இலக்கிய நயத்தோடு கற்பனைத் திறனோடும் புனைகதை வடிவில் கூற முற்பட வேண்டும்" என்பதே அது. அதன் பலன் அவருக்குக் கைமேல் கிடைத்தது. அவர் வெளியிட்டுள்ள மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத்தில் டாக்டர் செம்மல் சையத் மீராசாவின் பங்களிப்பு குறித்து முன்னுரை விளக்கம் தருகிறது.

'கூரியர்' ஆசிரியர்

கல்லூரி ஆசிரியர் பதவியைப் புறக்கணித்த மணவையார் தென்மொழிகள் புத்தக நிறுவனத்தில் பதிப்பாசிரியர் பணியிலமர்ந்தார். அதனுடன் 1967இல் யுனெஸ்கோ கூரியரின் தமிழ் பதிப்புப் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். 32 ஆண்டுகளுக்கு மேலாக அதன் பொறுப்பாசிரியராக தம் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தமிழுலகம் நன்றியோடு நினைக்கக் கடமைப்பட்டுள்ளது. தமிழில் கூரியர் வெளியீட்டிற்கு ஏற்பட்ட தடைகளை மிகச் சாதுரியமாகத் தவிர்த்து, அதனைத் தொடர்ந்து வெளிவரச் செய்த பெருமை மணவையாரையே சாரும். கூரியர் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருந்து அறிவியல், தொழில் நுட்ப, மருத்துவக் கருத்துகளைத் தமிழிலே சொல்ல முடியும் என்று நிரூபித்ததன் மூலம் அறிவியல் தமிழ் வரலாற்றிலே தம் முத்திரையை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார் அறிவியல் தமிழ்ச் சிற்பி மணவையார்.

உலகில் தமிழ் உட்பட 30 மொழிகளில் வெளிவரும் யுனெஸ்கே கூரியரின் பதிப்புகளில் தமிழ் மொழிப் பதிப்பு நான்காவது இடத்தைப் பெறுகிறது என்பது மணவையாரின்

9