பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தமிழ்க் களஞ்சியம் மணவையார்


வரை குழந்தைகள் படித்து முடிப்பார்களாயின் வெகு விரைவில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம் நாடுகள், நகரங்கள், பெரியார்கள் பற்றியும் கணிசமான அறிவைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை" எனத் தெளிவாகவும் திட்பமாகவும் விளக்கிக் கூறியுள்ளார் பன்னூலாசிரியர்.

இந்நூலுக்கு ஆய்வுரை வழங்கிய பன்மொழிப் புலவர் மெளலவி எம்.அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்கள், "முஸ்லிம் சிறார்களுக்கு இலகுவான நடையில் ஒரே தொகுதியாக கலைக் களஞ்சியம் ஒன்று வெளிவந்தால் அது எத்துணைச் சிறப்புடையதாக இருக்கும் என்று பல நேரம் நான் எண்ணிப் பார்த்தது உண்டு. என் எண்ணத்துக்கு ஓர் ஆக்கபூர்வமான வடிவம் கொடுத்தமை போன்று கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள், ஓர் ஆழகிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்" எனக் குறிப்பிடுவது எல்லா வகையிலும் பொருத்தமுடையதாகும்.

இந்த இளைஞர் இஸ்லாமிய கலைக் களஞ்சியத்தின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்று பாரசீக, அரபு, உருதுச் சொற்கள் அதிகம் கலவாமல் நல்ல தமிழில் பொருள் விளக்கம் அமைந்திருப்பதாகும்.

பன்னூலாசிரியரின் இஸ்லாமியக் கலைக் களஞ்சியத் தொகுதிகள் இஸ்லாமியச் செய்தியைச் சொல்ல பாரசீக அரபு, உருது மொழிச் சொற்களை வெகுவாகக் கையாண்டுள்ளதால் அவற்றை முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமியச் செய்திகளை அறிய பெரும் இடர்பாட்டுக்காளாயினர். இது தவிர்க்க முடியாததும் கூட. இம்மொழித் தொல்லைகள் ஏதும் இல்லா வண்ணம் வளர் தமிழ்ச் செல்வர் இந்த இஸ்லாமியக் கலைக களஞ்சியத்தை எழுதியுள்ளார். பாரசீக அரபு, உருதுச் சொற்கள் அதிகம் இடம் பெறாவிட்டாலும்