பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுபபாசிரியர்

11


சாதாரணமாக ஒரு அரசியல் கட்சியினர் ஒருவரைப் பாராட்டி விருதோ பரிசோ தந்தால், அப்பரிசு பெற்றவரை பரிசளித்த கட்சி சார்புடையவராகவே கருதி, கட்சி முத்திரை குத்திவிடுவார்கள். பிற கட்சியினர் அவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். இதுதான் வழக்கம். ஆனால், மணவை யாரைப் பொறுத்தவரை அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் விதி விலக்குப் பெற்றவராகத் திகழ்கிறார்.

முதன் முதலாக அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். 'கலைமாமணி' விருது தந்தார். அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் "திரு.வி.க." விருது தந்து பாராட்டினார். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. முதல்வர் செல்வி ஜெயலலிதா தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் உலகத் தமிழர்களே பாராட்டும் வகையில் 'சிறப்பு விருது' தந்து போற்றினார். தமிழ் மாநில காங்கிரஸின் அங்கமான தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பினர் "மூப்பனார்" விருது தந்தனர். திராவிடர் கழகப் பேரங்க மான முத்தமிழ் மன்றத்தினர் "பெரியார்" விருது தந்தனர். எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் இராம. வீரப்பனைத் தலைவராகக் கொண்ட ஆழ்வார்கள் ஆய்வு மையம் "எம்.ஜி.ஆர்" விருதளித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரங்கமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் "குன்றக் குடி அடிகளார் பரிசு" தந்து பாராட்டியது. இவ்வாறு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஏதாவது ஒருவகையில் இவருக்குப் பரிசும் பாராட்டும் விருதும் தந்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகப் புலனாகிறது. கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியை ஏற்கின்றனர். போற்றிப் பாராட்டி ஊக்குவிப்பது தங்கள் இன்றியமையாக்