பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ் வளர்சசியில் மணவையார் செய்த புரட்சி


"பாடமாகப் படிப்பது சிறப்புத் தமிழ். ஆனால் விரும்பிப் படிப்பது மருத்துவம். மருத்துவப் படிப்பில் இவ்வளவு ஆர்வமுள்ள நீ மருத்துவம் படிக்கச் சென்றிருக்கலாமே?"என்ற பேராசிரியரின் கேள்விக்குப் பதிலாக,

"பொதுவாக அறிவியல் நூல்களைப் படிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். பொருளறிவு பெற வேண்டும் என்பதைவிட இச்செய்திகளையெல்லாம் தமிழில் தரவேண்டும் என்ற வேட்கையோடுதான் இவைகளைப் படிக்கிறேன். அவ்வப்போது படிக்கும்போதே ஆங்கிலப் பகுதிகளைத் தமிழில் சொல்லிப் பார்ப்பேன்" என்று கூறியதைக் கேட்ட பேராசிரியர், மணவை முஸ்தபாவின் உள்மனதுள் அறிவியல் தமிழ்ப் பணிக்கான அடி வேர் அழுத்தம் பெற்று வருவதைக் கண்டு மகிழ்ந்தவராய் "நல்ல முயற்சி" என்று கூறிப் பாராட்டினார். இதை முஸ்தபா, பேராசிரியர் தன் முயற்சிக்கு வழங்கிய அங்கீகாரமாகவும் ஆசீர்வாதமாகவும் எடுத்துக் கொண்டார்.

சிந்தனை விரிவு

இவ்வுணர்வுக்கு வேகமுடுக்கியாக தெ.பொ.மீ.யின் செயல்பாடுகள் அமையலாயின. குறிப்பாக சொல்லாக்க முயற்சியில் - மொழியியல் அடிப்படையில் ஈடுபடுத்தலானார். இதன் விளைவாக தமிழ் நாடு அளவில் தன் சிந்தனையோட்டத்தைச் செலுத்தி வந்த மணவையாரை அனைத்திந்திய அளவில் சிந்திக்க வைத்தார். பேரா. தெ.பொ.மீ. மணவையாரை இந்திய அளவில், மட்டுமல்லாது உலக அளவில் காலப்போக்குக்கேற்ப தமிழ் வளர்ச்சி பற்றி ஆழச் சிந்திக்கத் தூண்டியவர் சேவியர் தனிநாயக அடிகளார் ஆவர். அறி வியல் வளர்ச்சிக்கேற்ப அறிவியல் தமிழாகத் தமிழை உரு மாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி முஸ்தபாவை உரக்கச் சிந்திக்கத் தூண்டியவர் சேவியர் தனிநாயக அடிகளே