பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


 இந்த ஓரிறைக்கொள்கையைப் பூரிசங்கராச்சாரியார், பகவத்கீதை வாசகம், கெளதம மகரிஷி, சங்கராச்சாரியார் போன்றோர் வற்புறுத்தும் பாங்கைச் சான்றுகளுடன் நிறுவும் ஆசிரியரின் சாமர்த்தியம் நமக்கு வலிமையூட்டுகிறது. இந்து சமயத்தின் 6 காலப் பூசை-இஸ்லாத்திலும் தஹஜ்ஜத்தைச் சேர்த்து 6 தொழுகை வேளைகள். இந்து சமய விரதங்கள் இஸ்லாத்தில் நோன்புகள். ஜகாத், சதக்கா, ஃபித்ரா, போன்றவற்றுக்கிணையான இந்து தர்மங்கள்; உடல் திறமுள்ள முஸ்லிமின் வாழ்நாளின் உயிர்க்கடமையான ஹஜ்ஜு, இந்துக்களின் புனித யாத்திரைகள்-எனப் பல வகைகளில் ஒருமைப்பாட்டினை விளக்குகின்றார் ஆசிரியர்.

மேலும் அல்லாஹ் யார்? இஸ்லாம் என்றால் என்ன? என்பனவற்றுக்கு அரிய விளக்கங்கள்; எல்லாம் வல்ல அல்லாஹ்வால் மட்டுமே உம்மி நபியின்(சல்) குருவாக இருந்து ஓதவைக்கும் அருமை தேரும்; உலகம் ஒன்று; பல கிளைகள், கோத்திரங்களாய் விரிந்த இவ்வுலகினர் அனைவரும், ஒரே மூலமான மூலத் தாய் தந்தையரால் பிறந்தவர்; அனைவரும் எச்சமயத்தவராயினும் சகோதரரே; குலம்; கோத்திரம் வெறும் அடையாளமே; யாரிடமிருந்து மனித இனத்துக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்' "இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை; உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்" என்ற அரிய திருமறை விளக்கங்களைச் சீரிய சான்றுகளுடன் விளக்குதல்; பள்ளிவாசலில் கிறித்தவர் பிரார்த்தனை, ஜெரூசலத்தில் உமர்(ரலி) அவர்களின் சமயப்பொறை, பிறசமய எதிரிகளை அன்பால் எதிர் கொண்ட பெருமானார்(சல்) அவர்கள், மதினாவில் முதல் சர்வசமய மாநாடு; யார் என்பதைவிட, என்ன என்பதில் உள்ள சிறப்பு, அல்புரூனி, அன்னை இந்திரா ஆகியோரின் ஒருமையுணர்வு, வள்ளலாரின் ஆடை 'இஹ்ராம்' ஆடையை ஒத்திருத்தல்; பதினெண் சித்தர் பட்டியலில் மச்ச