பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


!:8 அறிவியல் தமிழ்

ஆளாகவேண்டும் என்று எண்ணிக் கதிரவன் இலங்கைமேல் செல்வதில்லை என்று மக்கள் கூறிவருவது தவறு; இலங்கை யின் பொன்மயமான மதிலின் ஒளியினால் கண் கூசுதல் பற்றியே இவ்வாறு விலகிச் செல்லுகின்றான் என்பதே கவிஞனின் கருத்து. இங்கு வானநூல்பற்றிய மெய்மையைக் கற்பனை நயம் தோன்றக் கூறியிருப்பது எண்ணி மகிழத் தக்கது. பேராசிரியர் ஐன்ஸ்டைன் இந்த அகிலத்தின் வெளி வளைந்துள்ளது என்றும், அது விரிந்து கொண்டே போகின்றது என்றும் கூறுவர். ஓர் இரப்டர் பலூன்மேல் பல புள்ளிகளை வரைந்து அப்பலூனை ஊதினால் அது பெரிதாக ஆக ஆக இப்புள்ளிசளின் இடையிட்ட தூரமும் அசன்று விடுகின்றது. இதைப்போல் விண்வெளியும் விண் மீன் மண்டலங்களை ஏந்திக் கொண்டு அகன்று கொண்டே போகின்றது என்பது இன்றைய அறிவியலார் கண்ட முடிவு. இவை போன்ற பல வானநூற் கருத்துகளைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

பொறி இயல்: பண்டைத் தமிழர்கள் பொறியியலி ஆம் வல்லுநர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. சிந்தாமணியில் குறிப்பிடப்பெறும் விசயை இவர்ந்து சென்ற மயிற்பொறியும், பெருங்கதையில் குறிப்பிடப்பெறும் யூகியால் சமைக்கப்பெற்ற இயந்திர யானையும், புறநானூறு கூறும் வலவனேவா வான ஊர்தி பும் இராமாயணத்தில் காட்டப்பெறும் புட்பக விமான மும் பொறி இயல் அறிவினால் அமைக்கப்பெற்ற சாதனங்கள் என்று கருதலாம். அமைக்கப் பெறாவிடினும், அமைக்கலாம் என்ற அறிவியல் கற்பனையாவது எழுத் திருக்கவேண்டும் என்று கருதவாவது இடம் உண்டல்லவா! இன்று பல்வேறு துறைகளில் பொறியியல் அறிவு வளர்ந் துள்ளதைப்போல் அன்றைய பொறியியல் அறிவு வளர்ந் திருந்ததா என்பதை எடுத்துக் காட்டற்குரிய சான்றுகள்