பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறிவியல் திருவள்ளுவம்



தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத். தையோ பேசுபவர் யாம்' என்றே பேசுவர்.

“யாம் அவண் நின்றும் வருதும்”¹

“இஃது யாம் இரந்த பரிசிலல்”²

“யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல”³

“படையமை மறவரும் உடையம் யாம்”

இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,

கண்ணகி

“என் காற்சிலம்பு” என்று கூற

மன்னன் பாண்டியன்,

“யாம் உடைச்சிலம்பு” என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்[1] [2] [3] [4] [5]

  1. 1.கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணா: 28
  2. 2.கபிலர் : புறம் : 110-2
  3. 3.கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
  4. 4. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
  5. 5. இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69