இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
அறிவியல் திருவள்ளுவம்
"யாம் கண்டது" என்று அவரே பேசுவதால் அவர் பட்டு அறிந்ததை எழுதியுள்ளார் என்று கொள்ள வேண்டும். எனவே, இவை திருவள்ளுவரின் பட்டறிவுக் கருத்துக்கள்.
('யாம்' என்னும் சொல் திருவள்ளுவரால் இம்மூன்றிடங்களில் மட்டுமன்றி மேலும் 10 இடங்களில் அமைந்துள்ளது. பொதுவாக 2 இடங்கள், (790,844), தலைவன் பேச்சாக 3 (1111, 1123, 1329), தலைவி பேச்சாக 7 (1140, 1150, 1171, 1204, 1245, 1218, 1312) ஆக !3. இடங்களில் காண்கிறோம். இவை பிறர் பேசுவனவாகப் படர்க்கையில் அமைக்கப்பட்டவை).
தனித் தன்மையுள்ள குறட்பாக்கள்
முன்னர்க் காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் தான் திருவள்ளுவர் தம்மை முன்னிறுத்திப் பட்டறிவுடன் பேசினார். தம் பளிச்சிடும் பட்டறிவுடன் பேசும் இம்மூன்று குறட்பாக்களிலும் அமைந்த பிறசொற்களும், ஒத்துள்ளமை நோக்கத்தக்கது.
மக்கட்பேறு | வாய்மை | கயமை |
---|---|---|
பெறும் அவற்றுள் | கண்ட அவற்றுள் | அவரன்ன |
யாம் | யாம் | யாம் |
அறிவது | கண்ட | கண்டது |
இல்லை | இல்லை | இல் |
அறிவறிந்த | எனைத்தொன்றும் | ஒப்பார் |
அல்லபிற | அல்ல பிற(நல்ல பிற) | அன்ன |