பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

131


இரண்டனையும் தம் இரு உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு சித்து விளையாடி, ஒரே விதத்தில் இரண்டையும் விம்மிப் பெருகச் செய்துக்கொண்டே போவார். பந்து இவ்வுலக அளவு பெரிதாய் விம்மித் தோன்றுங்கால், அணு ஒரு பையன் விளையாடும் பந்து போலத்தான் தோன்றுகின்றது. பந்துக்கும் உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை! அணு அவ்வளவு நுட்பமானது. அதனால் அதனைக்கொண்டுதான் அறிவியலறிஞர்கள் பண்டைக்காலத்து சித்தர்கள்போல் பந்தாட்டமும், கோலியாட்டமும் விளையாடுகின்றனர். எல்லா விளையாட்டு அவர்களது கற்பனையுலகிலேயே நடைபெறுகின்றன!

அணுவின் நுட்பத்தை இன்னொரு விதமாகவும் தெளியவைக்கலாம். ஓர் அங்குல நீளம், ஓர் அங்குல அகலம், ஓர் அங்குல உயரம் உள்ள இடத்தில் அடங்கிக் கிடக்கும் அணுத்திரளைகள் ஆறு இலட்சம் கோடி கோடி, இதனை எண்ணால் 6,00,00,000,000,000,000,000 என்றாகின்றது. இப்பேரெண்ணை மனத்தில் பதித்துக்கொள்ள முடியாது. சுருக்கி எழுதின 6 x 1019 என்று ஆகும். இதனை விநாடிக்கு ஒரு எண் வீதம் எழுதினால் ஓராண்டில் ஒருவரால் எண்ணி முடிக்கக்கூடியது மூன்று கோடியே பதினைந்து இலட்சத்து முப்பத்து ஆறாயிரம். நாற்பது கோடி மக்களும் அந்த அணுக்களை எண்ணுவதில் ஈடுபட்டால் எண்ணி முடிய ஏறக்குறைய 5000 ஆண்டுகள் ஆகும். அவர்கள் கலியுகம் பிறந்ததிலிருந்து இந்த நூற்றாண்டு வரை அவற்தை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்! இப்பொழுது அணுவின் நுட்பமும் எண்ணிக்கையும் ஓரளவு நமக்கு புலனாகும்.

அணுவின் உட்பகுதியை உட்கரு (Nucleus) என்று வழங்குவர். இதில் நேர் மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களும் (Protons) மின்னேற்றம் அற்ற நியூட்ரான்களும் (Neutrons) அடங்கியுள்ளன. இதனைச் சுற்றிலும் பல வட்டங்களில் எதிர் மின்னேற்றமுள்ள எலக்ட்ரான்களும் (Electrons) சுழன்றுகொண்டுள்ளன. எலக்ட்ரான்கள் நிறையற்றவை எனக் கருதப்பெறும் அளவுக்கு மிகவும் சிறியவை; நுண்ணியவை. இவற்றிலுள்ள மின்னேற்றம் உட்கருவின் நிறையையொட்டி அதிகமாகும். புரோட்டான் எலக்ட்ரானைவிட 1850 மடங்கு எடை மிக்கது. அணுவோ மின்னேற்றம் ஏற்படாமல் சமநிலையிலுள்ளது. உட்கருவைச் சுற்றிக் கோள் நிலையாகச் சுழன்று கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து படிப்படியாய் 92 வரையிலும் உயர்ந்துகொண்டே போகும். இந்த எதிர் மின்னேற்-