தமிழ் இலக்கியம்
29
செய்கின்றது. ஆகவே, நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் சூத்திரதாரராய் உள்ளது காலம் என்ற திகிரி.
“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
நடாத்தும், அந்தக்
காலத் திகிரி”
என்று சொல்லி, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாராட்டினார், கவிஞர்.
நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவைகளோடு கலந்து பிரிக்க முடியாத நான்காவது அளவை ஒன்றுள்ளது. அதுவே காலம் என்ற அளவை என்பதை அறிவியல் முறையில் நிலைநாட்டினார், ஐன்ஸ்டைன். காலத்துக்குமேல் ஐந்தாவது அளவை ஒன்றுள்ளது என்று ஊஸ்பென்ஸ்கி என்ற இரஷ்ய அறிவியலறிஞர் கூறுகின்றார். அறிவியலறிஞர்கள் இன்னும் பலப்பல அளவைகளைப் புதியனவாய்க் கண்டறியலாம். ஆகவே, அவற்றிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, 800 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்,
“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்”
என்று பாடினார்.
காலம் முதலான மூலச் சக்கரங்களுக்கெல்லாம் விசை கொடுத்து முடுக்கிவிட்ட உள்மூலச்சக்கரம் ஒன்றுள்ளது. அதைப் பற்றிப் பேசப்போகின்றார், திவ்வியகவி. அவர் சொல்லப்போவதைப் புரிந்துகொள்வதற்காக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொள்ளலாம். நீலகிரி மலையின் உச்சியில் இப்போது பெருமிதத்துடன் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் உதகமண்டலம் அந்தக் காலத்தில் இல்லை. அது மனித நடமாட்டமில்லாத ஒரு பொட்டல்காடாய் இருந்தது. நம் நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த ஓர் ஆங்கிலேயர் தற்செயலாய் மலைமேலேறிச் சுற்றி வந்தபோது, இப்போது உதகமண்டலம் இருக்கும் மலை உச்சியில் ஓர் அழகிய