பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கியம்

49


பிறப்பதற்கு ஏதுவாகும். இவை வெவ்வேறு நிலைகளில் ஒட்டிய பாங்கில் பிறக்கும். இவற்றை ஒட்டுப்பிறவிகள் (Conjoined twins) என்று வழங்குவர். முதன் முதலில் இத்தகைய பிறவிகளுள் ஒன்று உயிருடன் சயாம் நாட்டிலிருந்து வந்ததைக் கண்டதால் இவ்வகைப் பிறவிகளை சயாம் இரட்டையர் (Siamese twins) என்று வழங்குகின்றனர். சாதாரணமாய் ஒட்டுப் பிறவிகள் உடலில் ஒரு பகுதி (எ-டு: இடுப்பு) தலை, பக்கங்கள் ஆகியவற்றில் ஏதாவது, ஓரிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். பெரும்பாலும், சயாம் இரட்டையர் அச்சு இரட்டையராய் இருப்பர்.

இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபுவழிப் பண்பு என்று அறியக்கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப்பண்பு அடிக்கடி தலைகாட்டுவதாய் ஆராய்ச்சிகளால் அறிகின்றோம். ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளையுடைய குழந்தைப்பேறு ஏற்படக் காண்கின்றோம். ஒர் ஆஸ்திரியப் பெண்மணி 69 குழந்தைகளுக்குத் தாயான செய்தியை அறிகின்றோம். புராண சுசீலையையும் இவள் தோற்கடித்து விட்டாள், குழந்தை பெறுவதில்! அப்பெண்மணி நான்கு தடவைகள் நாந்நான்கு குழந்தைகளையும், ஏழு தடவைகள் மும்மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்ததாக அறியக் கிடக்கின்றது.

முக்கோவைக் குழவிகள், நாற்கோவைக் குழவிகள், ஐங்கோவைக் குழவிகள், ஐந்திற்கு மேற்பட்ட குழவிகள் விரிவஞ்சி விளக்கப்பெறவில்லை.[1]

மேலே குறிப்பிட்ட சுசீலை என்பவருக்குப் பிறந்த 27 குழந்தைகளில் ஆண் பெண் குழந்தைக ளாகக் கலந்தும் இருக்கலாம். கவிஞர் இவர்களைப் பிரித்துக்

கூறவில்லை.


64. வாழையடி வாழை என்ற என் நூலில் (மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108) இயல் 20இல் கண்டு தெளிக.

  1. 64. வாழையடி வாழை என்ற என் நூலில் (மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108) இயல் 20இல் கண்டு தெளிக.