பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

காலம், பல்வேறு பேர்களுடன் பல்வேறு கடை போடுகிறது. காலம், எவருடன் உலவு கிறது, எவருடன் குதிநடை போடுகிறது, எவருடன் பாய்ந்து ஓடுகிறது, எவருடன் நின்ற இடத்திலே நிற்கிறது என்று நான் உனக்குக் கூறுவேன்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

இவ்வாறாக, மணிக்கு மணி நாம் மலர்ந்து கனிகிறோம். பின்னர், மணிக்கு மணி, அழுகி அழிகிறோம். அதிலே அடங்கியுள்ளது ஒரு கதை.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

காலத்துக்கு ஏவல் செய்யக் காத்திருப்போருக்கு, காலம் என்றும் துணை செய்யும்.

—மகாத்மா காந்தி

மற்றெல்லாக் காலங்களையும் போல், இந்தக் காலமும் மிக நல்ல காலம்தான்—அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால்.

—ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்

போன காலங்கள் இப்போதுள்ள காலங்களை விடச் சிறந்தவை, என்ற மயக்கம், எல்லாக் காலங்களிலும் ஓங்கி நின்றுள்ளது எனலாம்.

—ஹோரஸ் கிரீலி