பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172. அறிவியல் பயிற்றும் முறை ASA SSASASMSMSAASASASS மாளுக்கர்களுக்குக் கவர்ச்சி ஏற்படாது ; அவற்றை அவர்கள் உற்சாகத்துடனும் கற்க மாட்டார்கள். பள்ளியில் பெறும் கல்வியறிவு வாழ்க்கையுடன் ஒட்டியதுதான் என்பதையும் அவர்கள் உணர்ந்தால், தான் தாம் பெறும் கல்வியில் சுவையினேக் காண்பர். இவ்வாறு பொருத்திக் கற்பித்தலைத் தற்செயலாக நடைபெறுமாறும் ஒரு திட்டத்தில் அமைத்து அதன்படியும் மேற்கொள்ளலாம். எப்படி மேற்கொண்டாலும், அ.து இயல்பாகவும் எளிதாகவும் அமைதல் வேண்டும். ஒரு பாடத்தைப் பல்வேறு கோணங்களில் பார்த்தால்தான் அதில் குழந்தைகளுக்குத் தெளிவு பிறக்கும் கற்கும் பாடமும் சொந்த அநுபவத்துடன் நன்கு பொருந்தும். இனி, கல்வி ஏற்பாட்டிலுள்ள பாடங்கள் அறிவியலுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன : அவற்றை எவ்வாறு பொருத்திக் கற்பிக்கலாம் ? என்பனவற்றைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். - மொழிப் பாடம் : ஒருவர் கருத்தை மற்றவருக்கு உணர்த்து வதற்காகவே மனிதல்ை ஆக்கிக் கொள்ளப் பெற்ற சிறந்த கருவி மொழியாகும். மொழியின்றேல் கலேகள் இல்லை : நாகரிகம் இல்லை. அறிவியல் கருத்துகளே மொழியின்றேல் பிறருக்கு எங்ங்னம் எடுத்துக் காட்ட இயலும் : இன்று உயர்நிலைப் பள்ளிகளில் தாய் மொழி வாயிலாகக் கல்வி பயிற்றப்படுகின்றது ; கல்லூரிகளிலும் தாய். மொழியின் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பெறும் நடவடிக்கைகள் அரசினர் கல்லூரிகள&னத்திலும் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. பள்ளிகளைப் பொருத்த வரையில் தாய் மொழியே பள்ளியின் உயிர்கிலே போல் இயங்கி வருகின்றது. எனவே, அறிவியல் பயிற்றும் ஆசிரியர்கள் மொழியுணர்ச்சியுடன் கற்பித்தல் வேண்டும் ; எளிய, இனிய தமிழில் தெளிவாகக் கருத்துகளே எடுத்து விளக்கும் ஆற்றலே. மாளுக்கர்களிடம் வளர்க்க முனைதல் வேண்டும். அறிவியலே மொழிப் பாடத்துடன் இணேத்துக் கற்பித்தலில் அறிவியல் ஆசிரியர்கள் பங்கு கொள்ளல் வேண்டும். வகுப்பில் இங்ங்னம் பயிற்றுவதைத் தவிர பள்ளி வாழ்க்கையில் நேரிடும் பல்வேறு நிகழ்ச்சிகாேயும் நல்ல. முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழ் வகுப்புகளில் இயற்கைப் பாடம் பயிற்றப்படுங்கால், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் முதலிய வற்றைப்பற்றிய குழந்தைப் பாடல்களேக் கையாளலாம். சற்று வளர்ந்த பிள்ளைகளுக்குக் கவிமணி எழுதியுள்ள மழலைமொழி’, ‘இயற்கை இன்பம்’ என்ற தலைப்புகளின் கீழ்க் காணப்படும் பாடல்களே மேற். கொள்ளலாம். ஒரு பறவையின் சிந்தனே', 'குதிரையின் புலம்பல்” போன்ற பாடல்கள் அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து களிப்பின 1. இவைபற்றிய முழு விவரங்களே இந்த ஆசிரியர் எழுதியுள்ள "தமிழ் பயிற்றும் முறை” என்ற நூலில் கண்டு கொள்க. 2. தேசிகவிநாயகம் பிள்ளை : மலரும் மாலையும்: