பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#74 அறிவியல் பயிற்றும் முறை - ---------------------------------- ہمہمہ۔-منہدم ہوسمی -----------۔-۔-...... அண்டங்கள் யாவும் பிறந்தன என்ற மெய்ம்மையை அவர்களுக்குக் கற்பிக்க நேரிடுங்கால், மாணிக்க வாசகரின் திருவண்டப் பகுதி’யின், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளம்பருக் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின் நூற்ருெரு கோடியின் மேற்பட விரிந்தன. என்ற வரிகளை எடுத்துக் காட்டி விளக்கலாம்." சுற்றுலாவிற்குப் பிறகு எழுதப்பெறும் கட்டுரைகளில் இத்தகைய வருனனைப் பகுதிகளே எடுத்தாளலாம் என்று குறிப்பிடலாம்; அவ்வாறு எழுதப்பெறும் கட்டுரைகளே கன்முறையில் அமைக்கும் வழி களேக் காட்டலாம். அவற்றில் அறிவியல் மெய்ம்மைகள் பொதிந் திருத்தலே முக்கியம் என்பதையும் குறிப்பிடலாம். இம்முறைகளில் அறிவியல் பாடத்தை மொழிப் பாடத்துடன் பொருத்திக் கற்பித்தால் மொழிப் பாடமும் சிறக்கும் அறிவியல் பாடத்திலும் புதிய சுவை காணப்பெறும். மொழியாசிரியரும் அறிவியல் ஆசிரியரும் ஒத்துழைத் தால் இம்முறை பல்லாற்ருனும் சிறக்கும். அறிவியல் அறிஞர்களின் வரலாறுகள், தன்.வரலாறுகள், இயற்கைவரலாறுகள், கண்டுபிடிப்புகள், புதியது புனேதல் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுபவைகள் போன்றவற்றைக் கூறும் நூல்களே வீட்டிலும் பிற சமயங்களிலும் பயிலுமாறு மாணுக்கர்களே ஏவலாம். இத்தகைய நூல்கள் ஆங்கிலத்தில் எண்ணற்றவை உள்ளன : தமிழிலும் இத்தகைய துறைகளில் பல் நூல்கள் எழுதப்பெற்று வருகின்றன. அவை நல்ல முறையில் அமைந்தால் மாளுக்கர்களிடம் மொழி வளர்ச்சி ஏற்பட வழியுண்டாகும். கணிதம் : அறிவியல் துறைகளின் உயர்ந்த கிலேயில் அளவறி பண்புகள் காணப்பெறுவதால், அந் நிலையிலுள்ள தகவல்களேத் தெளிவாக அறிந்து கொள்வதற்குக் கணித அறிவு இன்றியமையாதது. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பாடப்பகுதிகளைக்கூடக் கணித அறிவின்றிச் சரியாக உணர இயலாது. விகிதசமம், தலைகீழ் விகிதம், சமன்பாடுகள், வரைப்படங்கள் போன்ற அறிவு இருந்தால்தான் அப் பகுதிகளில் வரும் கணக்குகளைச் செய்ய முடியும் ; தாமே சோதனை களில் அளந்து காணும் அளவைகளைக்கொண்டு முடிவுகளைக் கணக்கிடவும் முடியும். கணித ஆசிரியரும் அறிவியல் ஆசிரியரும் 1. திருவாசகம் - திருவண்டப் பகுதி-வரி (1-4) 2. இஃது உயர்நிலைப் பள்ளி மாளுக்கர் அறிவு நில்க்குச் சற்று அப்பாற் . تقع ـة سلالة 8. இந்நூலாசிரியர் எழுதி வெளியிட்டுள்ள இளைஞர் வானுெலி, இளைஞர் தொஅக்காட்சி, அதிசய மின்னணு, நமது உடல், இராக்கெட்டுகள், அம்புலிப் பயன. முதலியவற்றைக் காண்க-கழக வெளியீடுகள்.