பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 அறிவியல் பயிற்றும் முறை - வேண்டும்; ஒவ்வொரு வகைச் சோதனையிலும் மாளுக்கர்கள் எளிதாக உணரக் கூடிய, எடுத்துக்காட்டுக்களேக் குறிப்புகளுடன் தருதல் வேண்டும். சோதனைகள் எவ்வாறு திருத்தப்பெறுகின்றன என்பதை யும் மாளுக்கர்கள் அறிந்துகொண்டால் நன்று. ஒவ்வொரு வகைச் சோதனையையும் எவ்வாறு ஆயத்தம் செய்வது என்பதுபற்றிய விரிவான விவரங்களே அளவியல் நூல்களில் கண்டு கொள்க.க. ; தேர்வுகளே நடத்துதலும் திருத்துதலும் : மாளுக்கர்கள் கவனிக்க வேண்டிய குறிப்புகளே நல்லமுறையில் ஆயத்தம் செய்துவிட்டால் சோதனைகளே நடத்துதல் மிகவும் எளிது. சோதனைகள் நடைபெறுங் கால் தனிப்பட்ட மானக்கர் விடுக்கும் விளுக்களுக்கு விடையளித்தல் ஆகாது. எல்லோரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடியவாறு ஒவ்வொரு வ ைக ச் சோதனைக்கும் விளக்கக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டால் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் குறுக்கிடா. எழுத்துப் பிழைகள்பற்றியவற்றில் மட்டிலும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்து விளக்கில்ை போதும் : அதிலும் தவருன கருத்துகளே விளைவிப்பன வற்றை மட்டிலும் விளக்கினால் போதும். . விடைத்தாள்களேத் திருத்துவதற்கும் எளிதான முறைகள் கண்ட றியப்பெற்றுள்ளன. திருத்து-திறவுகோல்கள்’களைக்கொண்டு இதை எளிதாகச் செய்துவிடலாம். சாதாரணமாக ஒரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்பெறும். ஒவ்வொரு வகைச் சோதனையிலும் உத்தேச விடைகள் தருவது மாறும். அவ்வாறு தரப்பெறும் உத்தேச விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பெறும். - W - S= RーN二 - என்ற வாய்பாட்டின்படி மதிப்பெண்கள் அளிக்கப்பெறும். இதில் S. என்பது மாணுக்கர் அடையும் மதிப்பெண் ; R என்பது சரியான விடைகள் ; W என்பது தவருன விடைகள் , N என்பது சரியானவை யாகக் கொடுக்கப்பெற்ற விடைகள். இதைக் கையாளுங்கால், சரி. தவறு சோதனைக்கு இவ்வாய்பாடு S = R – W என்றும், 3, 4, 5 மாறுபாடு உள்ள விடைகளேக்கொண்ட பொறுக்கு விடைச் சோதனை f களுக்கு முறையே s = R- S = R - S = R-- என் றும் மாறும் என்பது தெளிவாகும். சாதாரணமாக இவ்வாய்பாடு, சரி-தவறு சோதனைகளுக்கும் பொறுக்குச் சோதனைகட்கும் மட்டிலும்தான் நடைமுறையில் பயன் 1. Greene and Jorgensen . Measurement and Evaluation in the Secondary School. pp. 188—196.