பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


 கரும்பொருளிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளியேறும் கதிர்வீச்சு.

52. கருவொளி என்றால் என்ன?

ஒளிர்பொருள்களில் விழும் புறஊதாக் கதிர்கள். இவை புலப்படா ஒளியாகும்.

53. கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன?

தொல்பொருள்களின் வயதைக் கரி-14ன் அடிப்படையில் உறுதிசெய்தல்.

54. காலக்கணிப்பு நுட்பங்கள் யாவை?

தொல்லுயிர்ப்படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இதை உருவாக்கியவர் பிராங்க் லிபி, 1947.

55. இம்முறையின் இருவகைகள் யாவை?

1. சார்புக் காலமறி நுணுக்கம் - மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதிசெய்தல்.

2. சார்பிலாக் காலமறி நுணுக்கம் - நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல்.


10. ஒலிஇயல்


1. ஒலி என்றால் என்ன?

ஒர் ஊடகத்தினால் (காற்று) செலுத்தப்படும் அதிர்வுகள் அடங்கியது. இந்த அதிர்வுகள் மாறிமாறி நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் அமையும். ஒலி அழுத்த அலை என்றும் கூறப்படுவது. இது நெட்டலை வடிவமாகும்.

2. ஒலியின் பண்புகள் யாவை?

உரப்பு, பண்பு, எடுப்பு.

3. காற்றில் ஒலியின் விரைவு என்ன?

0"செஇல் 331.3 மீட்டர் வினாடி!

4. நீரில் ஒலியின் விரைவு என்ன?

நீரில் 25 செ.இல் 1498 மீட்டர் வினாடி’

5. கண்ணாடியில் ஒலியின் விரைவு யாது?