பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106



7. அவர் தந்தையார் தொழில் என்ன?

அவர் தந்தையார் மருத்துவர்.

8. அவருக்கு எதில் நாட்டம் அதிகமிருந்தது?

தோட்டக்கலையில்.

9. இந்நாட்டத்தை யார் விரும்பிப் பெற்றது?

பால் தம் தந்தையிடமிருந்து இந்நாட்டத்தை விரும்பிப் பெற்றார். அது அவரது வாழ்க்கைப் பொழுதுபோக்கு ஆயிற்று.

10. எந்த ஆண்டு அவருக்கு ஆராய்ச்சிப்பணி கிடைத்தது? எங்கு?

1933இல் புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சிப்பணி கிடைத்தது.

11. நாம் சுதந்திரம் அடைவதற்குமுன் வேளாண் ஆராய்ச்சி என்ன நிலையில் இருந்தது?

வேளாண் ஆராய்ச்சி பின்தங்கிய நிலையில் இருந்தது. பயிர்களை நோய் தாக்கிய வண்ணம் இருந்தது.

12. கோதுமை எந்நோய்க்கு ஆளானது?

துரு நோய்க்கு ஆளானது. இது ஒரு பூஞ்சை நோய். கோதுமை அதிகம் விளைந்தாலும் இந்நோயிலிருந்து அது தப்ப இயலாதவாறு இருந்தது.

13. இந்நிலையில் பால் செய்த முடிவென்ன?

துரு நோயை எதிர்க்கும் பல வகைக் கோதுமைகளை உருவாக்க விரும்பினார்.

14. அவர் உருவாக்கிய புது வகைக் கோதுமை எது?

எபி 700, 800 வரிசை. இவை ஒரு வகைத் துருநோயை எதிர்த்தன.

15. உண்மையான திருப்பம் எப்பொழுது எப்படி ஏற்பட்டது?

1954இல் ஏற்பட்டது. இப்பொழுது இவர் எபி 809 வகைக் கோதுமையை உருவாக்கினார்.

16. இதை உருவாக்க அவர் எவ்வளவு காலம் ஆராய்ச்சி செய்தார்?

அயரா உழைப்பினால் 18 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்தார்.