பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116


செய்."

மகேஸ்வரி இதைத் தம் வாழ்நாள் செய்தியாக எடுத்துக் கொண்டார்.

10. அவர்தம் சிறப்புத் துறை என்ன?

தாவரக் கருவியல்.

11. எப்பொழுது அவர் டில்லிப் பல்கலைக் கழகத் தாவர இயல் துறைத் தலைவரானார்?

1949 இல் ஆனார்.

12. அவரை நாம் எவ்வாறு அழைக்கலாம்?

தற்காலக் கருவியல் தந்தை என்று அழைக்கலாம்.

13. உறையில் விதையுள்ள தாவரங்களில் அவர் செய்த புதுமை என்ன?

ஆய்வுக் குழாய்க் கருவுறுதல் நுணுக்கத்தைப் புனைந்தார்.

14. இதன் சிறப்பென்ன?

தாவரக் கருவியலிலும் பொருளாதாரத் தாவரவியலிலும் இது புதிய வாய்ப்புக்களை உருவாக்கியது.

15. மகேஸ்வரி வகுப்பில் எவ்வாறு நடந்து கொண்டார்?

தம் பேராசான் டட்ஜன் போலவே நடந்து கொண்டார்.

16. மாணவர்கள் மகேஸ்வரியிடம் இருந்த தங்கள் அன்பை எவ்வாறு வெளிக்காட்டினர்?

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல தாவரச் சிறப்பினங்களுக்கு அவர் பெயரைச் சூட்டினர். எ-டு பஞ்சாணனியா ஜெய்பூரியன்சிஸ், ஐசோடிஸ் பஞ்சாணனி.

17. அவர் எழுதிய சிறந்த இரு நூல்கள் யாவை?

1. உறையில் விதையுள்ள தாவரங்களின் கருவியலுக்கு ஒர் அறிமுகம்.
2. உறையில் விதையுள்ள தாவரங்களின் கருவியலில் அண்மைக்கால முன்னேற்றங்கள்.

18. பள்ளி மாணவ மாணவிகளுக்காக அவர் ஏன் நூல்கள் எழுதினார்?

உயிர் அறிவியல்களின் தரத்தை உயர்த்த இந்நூல்களை அவர் எழுதினார்.