பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31. 104 1996இல் பிரிட்டனில் நடந்தது. 700க்கு மேற்பட்ட கப்பல்கள் இதில் கலந்து கொண்டன. கடல்வள வியப்புச் செய்திகள் யாவை? 1. 63 விலங்கு வகுப்புகளில் 51 வகுப்புகள் கடலில் வாழ்கின்றன. இவற்றில் அடங்கும் வகைகள் 1,50,000. இவ்வகைகளில் அதிகமுள்ளவை நத்தைகள். (60,000 வகைகள். அடுத்துள்ளது 20,000 வகை நண்டினங்கள். மீன் வகைகள் 16,000. 2. உலகக் கடல்களில் 300 வேறுபட்ட உயிர்கள் வாழ்கின்றன. கடல் ஆராய்ச்சியின் விளைவாக 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3. உலகின் 7இல் 5 பங்கு கடல். 4. உலக எண்ணெய் உற்பத்தியில் 6 இல் 1 பங்கு கடல் படுகையிலிருந்து கிடைக்கிறது. 5. உலகக் கடல்களின் நீரளவு 329 மில்லியன் கன அலகுகள். 6. கடலில் உண்டாகும் தாவரங்களில் பாதி செம்பாதி யங்கள். 7. கடலில் காணப்படும் மிதவை உயிர்கள் முதல்நிலை உணவு உற்பத்தியாளர்கள். இவை மீன், திமிங்கிலம் முதலிய கடல் உயிர்களுக்கு உணவு. 8. கடல் விலங்குகளும் தாவரங்களும் சிறந்த மருந்துகளையும் தருகின்றன. பட்டர் மீனிலிருந்து கிடைக்கும் நஞ்சிலிருந்து மருந்து செய்யப்படுகிறது. இம்மருந்தான எட்ரோடோசின் ஆற்றல் வாய்ந்த வலி நீக்கி. 9. கடல் பூண்டுகளிலிருந்து கிடைக்கும் காரம் ஆல்ஜின். இது பல வகைப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. (1) பொருள்களைச் சுற்றும் தீப்பற்றாத்தாள். (2) உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள், வண்ணங் கள், நறுமணப்பொருள்களைச் சுற்ற. (3) அறுவையின்பொழுது குருதிக் கசிவை நிறுத்தப் பயன்படுவது. 32. கடலின் புதிய பயன்கள் யாவை? 1. நீர்த் தேக்கங்கள், காற்று வெளியேறா அறைகள்