பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35. 54. 35. 36. 57. 38. 39. 40. 25 பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இவற்றின் வகைகள் யாவை? 1. சார்புக் காலமறி நுணுக்கம் 2. சார்பிலாக் காலமறி நுணுக்கம் சார்புக் காலமறி நுணுக்கம் என்றால் என்ன? ஏனைய மாதிரிகளோடு ஒப்பிட்டு, ஒரு மாதிரியின் வயதை உறுதி செய்வது. சார்பிலாக் காலமறி நுணுக்கம் என்றால் என்ன? நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு, தொல் பொருளின் வயதை உறுதி செய்வது. மூன்று புவியமைப்பியல் கொள்கைகள் யாவை? 1. கண்ட நகர்வுக் கொள்கை 2. கடல் தரை பரவுகொள்கை 3. தட்டமைப்பியல் கொள்கை கண்ட நகர்வுக் கொள்கை என்றால் என்ன? 1912இல் ஆல்பிரட் வேக்கனர் இக் கொள்கையை முன்மொழிந்தார். புவிக்கண்டங்கள் தனித்தொகுதியாகத் தோன்றிய பின், அவை ஒன்றுக்கு மற்றொன்று சார்பாக நகர்ந்து வருகின்றன என்பது இக்கொள்கை. இவர் ஒரு கனிமவியலார். கடல் தரை பரவுகொள்கை என்றால் என்ன? 1960களில் புவி அமைப்பு இயலார் ஹேரி எச். ஹெஸ், கடலியலார் இராபர்ட் எஸ். டயட்ஸ் ஆகிய இருவரும் இக் கொள்கையை உருவாக்கினர். இது தொல் புவிக் காந்தத்தை விளக்குவது; தட்டமைப்பியல் உருவாக வழி வகுத்தது. தட்டமைப்பியல் கொள்கை என்றால் என்ன? புவி ஒட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. கண்டங்களின் விளிம்புகளிலுள்ள பெரும் கடல் தரை அகழிகளால் அழிபவை. இக்கொள்கையின் சிறப்பு யாது?