பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


99.இதய-குருதிக்குழாய் மண்டலத்தில் நைட்ரிக் ஆக்சைடு ஒரு குறிகாட்டும் மூலக்கூறு என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1998 இல் இராபர்ட் எஃப். பர்க்காட், லூயி ஜே. இக்னாரியோ, பெரிட்முராடு ஆகிய மூவரும் பெற்றனர்.


100.புரதங்களின் உள்ளார்ந்த குறிபாட்டுச் சிறப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1999 இல் குன்டர் பிளாமல் பெற்றார்.


101.நரம்பு மண்டலத்தில் குறிப்பாட்டு நடத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

2000 இல் அர்விட் கார்ல்சன், பால் கிரீன்கார்டு, எரிக் கண்டல் ஆகிய மூவரும் பெற்றனர்.


102.கண்ணறைச் சுழற்சியின் முதன்மைக் கட்டுப்படுத்திகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

2001 இல் லீ லேண்ட் எச். ஹார்ட்வெல், ஆர்.டி.மோதி ஹண்ட், பால் எம் நர்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.


103.மரபணுக்கள் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன, கண்ணறைகள் மடிவதற்கு எவ்வாறு அவை காரணமாக உள்ளன என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

2002இல் சிட்னி பிரனர், சர் ஜான் சுல்ஸ்டன், இராபர்ட் ஆர்விட்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.