பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


சர் அலெக்சாண்டர் பிளிமிங், செயின், புளோரே ஆகிய மூவரும் 1945இல் நோபல் பரிசு பெற்றனர்.

34. தூய வடிவத்தில் நச்சுயிர்ப் புரதங்களையும் நொதிகளையும் உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வெண்டல் மெரிடித் ஸ்டேன்லி, சம்னர் ஆகிய இருவரும் 1946இல் நோபல் பரிசுபெற்றனர்.

35. சடுதி மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஹெர்மன் ஜோசப் முல்லர் 1946இல் நோபல் பரிசு பெற்றார்.

36. கிளைகோஜன் என்னும் ஸ்டார்ச்சை நொதிமூலம் மாற்றியதற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

கார்ல் பாடினாண்ட் கோரி 1947 இல் தம் மனைவி தெரசாவுடன் நோபல் பரிசு பெற்றார். அதாவது இப்பரிசு இருவருக்கும் கிடைத்தது.

37. மூளையடிச் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பர்னார்டோ ஆல்பர்ட்டோ ஹவ்சே, சிடி கோரி, சிஎப். கோரி ஆகிய மூவரும் 1947இல் நோபல் பரிசு பெற்றனர்.

38. டீடீடி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் ஹெர்மன் முல்லர் 1948இல் நோபல் பரிசு பெற்றார்.

39. நடுமூளை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ரூடால்ப் வால்டர் ஹெஸ் 1949இல் நோபல் பரிசு பெற்றார்.

40. அட்ரினல் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிலிப் ஷோ வால்டர் ஹென்ச், ஈசி. கெண்டால், டி ரிச்டெ யின் ஆகிய மூவரும் 1950இல் நோபல் பரிசுபெற்றனர்,

41. ஸ்டெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வாக்ஸமன் 1952இல் நோபல் பரிசு பெற்றார்.

42. இடைநிலை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?