உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

2. கடல் நீரிலும் நன்னீரிலும் வாழ்வது.
3. இடுப்புத்துடுப்புகள் இல்லை. இதைப் பிடிக்க ஈட்டி பயன்படுகிறது.

13. பாம்புகளின் சிறப்பியல்புகள் என்ன?

1. காலற்றவை.
2. உடல் முழுதும் செதில்கள் உண்டு
3. செவி இல்லை.
4. செதில்கள் மூலமே ஒலியை உணர்பவை.
5. மணம் உணரும் நாக்கு.

14. மகுடிக்கு நாகம் கட்டுப்படுகிறது என்பது உண்மையா?

இல்லை. செவி இல்லை. ஆகவே காது மூலம் ஒலியை உணர முடியாது. மகுடி அசைவு பிடாரன் உடல் அசைவு ஆகியவற்றை அறிந்தே அது தலையை ஆட்டுகிறது.

15. நச்சுப்பாம்பு எப்பொழுது கடித்தால் நஞ்சு அதிகம்?

இரவில் கடித்தால் நஞ்ச அதிகம்.

16. தன்னினம் உண்ணல் பாம்புகளிடம் உண்டா?

உண்டு சிறிய பாம்புகளைப் பெரிய பாம்புகள் விழுங்கும்.

17. எலும்புகளையும் செரிக்க வைக்கும் ஆற்றல் பாம்பின் செரித்தல் நீருக்கு உண்டா?

உண்டு. பாம்பின் இரைப்பையில் முழு இரையும் செரிமானமாகிறது.

18. பாம்பியல் என்றால் என்ன?

பாம்புகளை ஆராயுந்துறை.

19.பாம்புப் பண்ணை சென்னையில் எங்குள்ளது?

கிண்டிக் குழந்தைகள் பூங்காவில் உள்ளது.

20. கட்டுவிரியன் என்பது யாது?

கொடிய நஞ்சுள்ள இந்தியப் பாறைப் பாம்பு. வயிற்றுச் செதில்கள் பெரியவை. வால் சுருண்டிருக்கும்.

21. விரியன் என்றால் என்ன?

இது சிறிய நச்சுத்தன்மையுள்ள பாம்பு. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் எனப் பலவகை.

22. நஞ்சுள்ள பாம்புகளில் பெரியது எது?

அரச நாகம் காடுகளில் வாழ்வது. நீளம் 2 மீட்டர்.