இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32. யாக்கோப்சன் உறுப்புகள் என்றால் என்ன?
- மூக்கோடும் வாயோடும் தொடர்புடைய இருபைகள். பாம்புகளில் நன்கு வளர்ந்துள்ளன. வாயில் உணவின் மணமறிவது வேலை.
33. கொடுபல்லி என்றால் என்ன?
- அற்றுப்போன மிகப்பழங்காலத்து விலங்கு நீளம் 25 மீ.
34. பறக்கும் பல்லி என்றால் என்ன?
- தட்டார் பல்லி. சிறகுப்படலம் முன்புறத்துறுப்புக்களுக்கும் பின்புறத்துறுப்புகளுக்கு இடையே இருப்பதால் இது பறக்க இயலும்.
35. தன்முடமாதல் என்றால் என்ன?
- ஓர் உயிரி தன் உடல் பகுதியைத் தானே முறித்துக் கொள்ளுதல். எ-டு. பல்லி வால் முறிதல்.
36.பறவைகள் என்பவை யாவை?
- 1. பறத்தல் இவற்றிற்கு மட்டுமே உரியது.
- 2. இச்செயலுக்குச் சிறகுகள் பயன்படுகின்றன.
- 3. இவற்றின் உடல் வெப்பநிலை மாறாதது.
- 4. காற்று விரிபைகள் உண்டு. இவை நுரையீரல் நீட்சிகள். மூச்சு விட உதவுபவை.
37. பறக்காத பறவைகள் யாவை?
- கோழி, வாத்து, மயில். இவற்றின் இறக்கைகள் பறப்பதற்கு ஏற்றவை அல்ல.
38. வான்கோழியின் சிறப்பென்ன?
- சேவல் போன்ற பறவை. நீளம் 95 செ.மீ. நீண்டவால். விளையாட்டுப் பறவை. இதன் கறி உணவாகப் பயன்படுவது.
39. ஆர்க்கியாப்டிரிக்ஸ் என்பது யாது?
- அழிந்தொழிந்த புதைபடிவப்பறவை. ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் இணைப்பாக அமைவது.
40. எமு என்பது யாது?
- பறக்க இயலாத மிகப் பெரிய ஆஸ்திரேலியப்பறவை. உயரம் 1.5 மீட்டர்.
41. கிவி என்பது யாது?