உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அறிவியல் விருந்து போல சேலை, மகனுரைக்கும் தந்தை நலத்தை, "தந்தையர் ஒப்பர் மக்கள் என்ற கூற்றுகளையும் சான்று களாகக் காட்டுவர். பிறவி வழியாக வரும் இந்த இயல்பே குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கினைப் பெறுகின்றது என்றும், அதுவே குழந்தை பெறும் கல்வியின் சாத்தியக் கூறுகளை அறுதியிடுகின்றது என்றும் கூறுவர். எனவே, குழந்தை த்ன் பெற்றோர்களிடமிருந்து பெறும் சில திறன் களும் கவர்ச்சிகளும் அதன் கல்வியை வரம்பு கட்டிவீடு கின்றன என்றும், அவை மலரும் தன்மையும் அக்குழந்தை வாழும் சூழ்நிலையில் எஞ்ஞான்றும் செல்வாக்குப் பெறுவ தில்லை என்றும் பகர்வர். இவ்வாறு குடிவழிக்குத் தரும் முக்கியத்துவத்தால் குழந்தைக் கல்வியில் சூழ்நிலையைப் பற்றிய எண்ணம், முயற்சி, வருத்தியுழைக்கும் கட்டுப்பாடு ஆகியவை யாவும் பயனற்றவை எனக் கருதுவதாக முடி கின்றது. இவர்கள் பாபர், சிவாஜி, இரஞ்சிட் சிங் போன்ற வர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டி அவர்கள் எவ் வளவு விடாமுயற்சியுடன் தமது வாழ்க்கையில் நேரிட்ட எதிரான சூழ்நிலையை எவ்வாறு சமாளித்தனர் என்றும், தம்முடைய சூழ்நிலையில் ஊக்கம் கொடுக்கும் ஆற்றல்களை எவ்வாறு முறியடித்தனர் என்றும், தாம் செல்லும் வழி iல் கடுமையான தடைகளும் தொல்லைகளும் இருந்த போதிலும் எவ்வாறு ஆட்சிபீடத்தைக் கைப்பற்றி அரியணை ஏறினர் என்றும் சான்றுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்குவர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இத் தகைய சூழ்நிலையில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்கள் யாவரும் உற்சாகத்துடன் செயலாற்றுவதுமில்லை; அப்படியாற்றினாலும் தோல்வியையே அடைகின்றனர். ஒருசிலர் மட்டிலும் இகிங்ணம் அருஞ்செயல்களின் கொடு முடிகளைக் காண்பதற்கும் பிற சிறப்புகளை எய்துவதற்கும் காரணம், இவர்கள் பிறவியுடன் பெற்ற இயல்பும் மேதைத்