பக்கம்:அறிவியல் விருந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 அறிவியல் விருந்து செளித்தால் எவ்வாறு தோற்றுமோ அங்ஙனமே இவை கதிரவனின் ஒளிப் பிழம்பில் ஆங்காங்கு தோற்றமளிக் கின்றன. இவை உண்மையில் கறுப்பு நிறமுடையனவல்ல. கதிரவ னுடைய ஒளிப் பிழம்பின் நடுவில் அமைந்திருத்தலால் இவற்றின் ஒளி மங்கிக் கறுத்துள்ளது. நண்பகல் வெயிலில் ஒரு கொள்ளிக் கட்டையைப் பிடித்தால் அஃது ஒளிமங்கிக் கறுப்பாய்த் தோன்றுகின்றதன்றோ? ஒவ்வொரு புள்ளியின் அளவும் மிகப் பெரியது. சிலவற்றின் குறுக்களவு 1,00,000 மைல் ஆகும். ஒவ்வொன்றிலும் பல பூமி உருண்டைகளை அடக்கிவிடலாம். கதிரவன் தன்னைத்தானே 274 நாட் சளில் சுற்றிக்கொள்வதால், இக் சரும் புள்ளிகளும் ஒளிப் பிழம்பின் ஒரு விளம்பிலிருந்து மற்றொரு விளிம்பிற்கு தகர்ந்து செல்லுகின்றன. இப் பெயர்ச்சி 14 நாட்களில் முநீறுப்பெறுகின்றது. புடைபெயர்ச்சி ஏற்படும் பொழுது புள்ளிகளின் உருவங்கள் மாற்றமடைகின்றன; சில மறைந்தே போகின்றன, இப்புள்ளிகன் தோன்றி மறைவதையொட்டிப் பூமியி லும் உடனுக்குடன் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. கரும் புள்ளிசன் மின்சாரப் பண்புடையவையாதலின் அவற்றினின்றும் பிறக்கும் காந்தப் புயல்களால் பூமியின் மீது அமைக்கப்பெற்று ஸ்ள மின்சாரக் கருவிகளும் பிற சாதனங்களும் பாதிக்கப்பெறுகின்றன.வானொலி அலைகள் அப்புயலில் கலந்து விடுவதால் ஒலிபரப்புகளில் கோளாறு ஏற்படுகின்றது. இப் புள்ளிகளின் விளைவாகவே பூமியின் துருவப் பகுதிகளில் செவ்வானச் சோதி" எனப்படும் அற்புதக் காட்சி தோன்றுகின்றது. கரும்புள்ளிகளினின்றும் உற்பத்தியாகும் மின்னணுக்கள்தாம் இச்சோதி தோன்று வதற்குக் காரணமாகும். இவ்வொளி பூமிக்குமேல் 70 மைல் உயரத்தில் தோன்றுகின்றது. 9. Gæsingarfræ7# Gyrrst-Aurora Borealís,