பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
அறிவுக்கு உணவு
 


நன்றி செலுத்து

துன்பத்தை நீயே தேடிக்கொள்; அல்லது பிறர் உண்டாக் கினால் அதற்காக நன்றி செலுத்து. ஏனெனில், மனவலிமை என்பது துன்பத்திலிருந்துதான் பிறக்கிறது.


வாழ்வில் வளம்

உழைப்பில் ஊக்கமும், உண்மையில் உறுதியும், தொழிலில் திறமையும், தொண்டில் நேர்மையும், சொல்லில் இனிமையும், துன்பத்தில் சகிப்பும் காணப்படுமானால், வாழ்வில் வளம் காணப்படும்.


சிறப்பு அழியாது

செல்வம் நிறைந்தபோது பெருமையும், குறைந்தபோது சோர்வும் கொள்ளாதவனிடத்தில், செல்வம் அழிந்தாலும் சிறப்பு அழியாது.


உயர்வு பெறாது

வாள் முனையே வலிமையுடையது என்றான் நெப்போலியன். நா. முனையே வலிமையுடையது என்றான் நாவலன். பேனா முனையே வலிமையுடையது என்றார் வால்டேர். அறிவு முனையே வலிமையுடையது என்றார் ஷா. இவை அனைத்தையும் மறுத்து ஒழுக்க முனையே வலிமையுடையது என்றார் வள்ளுவர். ஒழுக்கமற்றவனுடைய வாளோ, நாவோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது; பெற்றாலும் வெற்றி பெறாது பெற்றாலும் நிலைத்து நில்லாது.


எழுத்தாளன்

பேசுவது போல எழுதுபவன் எழுத்தாளனாகான்.
பிழைபட எழுதுபவன் படிப்பாளியாகான்
வைது எழுதுபவன் அறிவாளியாகான்.
வாழ்த்தி எழுதி வாழ்பவன் வாழத் தெரியாதவன்.