பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

{{rule

6. கவிதையும் நீதியும்

}} :

ജിഖാട வாழ்க்கை நீதியை அடிப்படையாகக் கொண்டது. கவிஞர்கள் எல்லோரும் இவ்வுண்மையை நன்ருக உணர்ந்துதான் தமது கவிதைகளில் நீதி பற்றிய கருத்துக்களைப் பொதிந்து வைத்திருக்கின்றனர். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் தமிழ்க் கவிஞர்கள் வாழ்க்கையைச் செம்மைப் ப்டுத்துவதே இலக்கியத்தின் நோ க் க ம் என்ற கொள்கையினை யுடையவர்களாக இருந்தனர் என்று சொல்லலாம். இதனை, உசத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டத் தீர்க்குநூ லஃதேபோன் மாத்தர் மனக்கோட்டத் தீர்க்குநூன் மாண்பு.' என்ற வெண்பாவால் அறியலாகும். நூலானது உடம்பி னுள்ளிருக்கின்ற ஞானத்தை வளர்வித்துத் தீமையாகிய அஞ்ஞான வளத்தைக் கெடுத்துக் கெட்ட மரத்தினது கோணலைப் போக்கும் எற்று நூலைப்போல் மாந்தரது மனக் கோட்டத்தைத் தீர்க்கும் என்பது இதன் கருத்து.

  • குமரிமலரில் (அக்டோபர் 1950) வெளிவந்தது, 1. நன்னுனல்-நூற்-25