பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 143 உரைநடைச் செல்வர்கள்: ஐரோப்பியர் நம்நாட்டிற்கு வருவதற்கு முன்பு தமிழ் மொழியில் உ ை த ைட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் தமிழில் தனி உரைநடை நூல்கள் முதன் மு. த ல க உண்டாக்கப்பட்டன. தமிழில் மட்டுமல்ல; எல்லா இந்திய மொழிகளிலும் ஐ ரே ப் பி ய ரி ன் தொடர்பிற்குப் பிறகுதான் தனி உ ைர ந ைட நூல்கள் தோன்றிப் பல்கின என்பதற்கு ஐயமில்லை. தமிழறிந்த ஐரோப்பியர்களில் காலத்தால் முற்பட்டவர் இத்தாலி நாட்டைச் சார்ந்த தத்துவ போதகசாமி (Robert de Nobili) என்ற அறிஞர் ஆவர். இவர் தமிழில் பல உரைநடை நூல்களை இயற்றினர். தமிழில் ஞானுேபதேச காண்டம், மந்திர மாலை, ஏசுநாதர் சரித்திரம், தமிழ் போர்ச்சுகீசு அகராதி முதலிய பதினெட்டு நூல்களை இயற்றியிருப்பதாக அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இவர் காலத்தில் தமிழ் நாட்டில் அச்சுப்பொறி இல்லாது இவர் நூல்கள் அச்சிடப்படாததாலும், அவற்றினைப் போற்றுவாரின்மை யாலும் அந்நூல்கள் யாவுமே இறந்துபட்டன. இவருக்குப் பிறகு வந்த இத்தாலி நாட்டு அறிஞர் வீரமாமுனிவர்தான் தமிழில் உரைநடை நூல்களை எழுதி முதன் முதலில் அச்சிட்டவர் என்று சொல்லலாம். கிறித்தவ சமய ப்ோதகர்க்காக வேதியர் ஒழுக்கம் என்ற உரைநடை நூலே முதன் முதலாக எழுதி வெளியிட்டார். அடுத்தபடியாக பாசமார்த்திக குருகதை’ என்ற நகைச்சுவை ததும்பும் கதையை எழுதினர். எழுத்து வாதம், சொற்போர் செய்வதில் இவர் வல்லவரான படியால் வேத விளக்கம், பேதம் அறுத்தல் என்ற வாத நூல்களையும் உரைநடையில் எழுதி வெளியிட் டுள்ளார். புலவரும் சாதாரண மக்களும் படிப்பிதற்கு