பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

வெளியே வந்து விட்டது. அது எங்கள் மருமகள் அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்ததாகத் தவறாக வந்து சொல்லும். அது உண்மையல்ல. ஆதை யாரும் நம்ப வேண்டாம்” என்று ஊர் முழுவதும் நன்றாகப் பறை அறைந்து சொல்ல ஏற்பாடு செய்தனர்.

எப்படி இச்செய்தி பரவுகிறது பாருங்கள்!


87. கரையேறுதல்

ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.

குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் விருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.


88. கடையும் உடையும்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.