பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு நாமே எதிரியாக இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

அப்படி உணராததால்தான், பலரை வைது, நாம் வையப் பெறுகிறோம்; சிலரை அடித்து நாம் அடிவாங்குகிறோம்; பலரை ஏமாற்றி நாம் ஏமாற்றம் அடைகிறோம்: பிறரைக் கெடுத்து, நாம் கெட்டுப்போகிறோம்.

இப்படிப் பார்க்கும்போது, ‘நமக்கு நாமே எதிரி’ என்ற உண்மையை மக்கள் என்று உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ அன்றுதான் அவர்களின் வாழ்வில் ஒரு நல்ல திருப்பமும் ஒளியும் உண்டாகும்’ என்பது தெளிவாகிறது.


36. கிளியும் ஓநாயும்

ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :

கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?

ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.

கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?

ஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/67&oldid=962690" இலிருந்து மீள்விக்கப்பட்டது