பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51. மருமகன்களின் அறிவுத் திறமை

பெருஞ் செல்வந்தர் ஒருவர் தன் பெண்ணுக்கு வெகு நாட்களாக ஒரு அறிவாளி மாப்பிள்ளையைத்தேடிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் இரண்டு பேர் தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தனர்.

செல்வந்தரும் வந்தவர்களை வரவேற்றுத் தன் மூத்த மாப்பிள்ளைக்கும் சேர்த்து மூன்று இலைகள் போட்டு உணவு பரிமாறி, அவர்களைச் சாப்பிடச் செய்தார்.

அப்போது பரண்மேல் ஏதோ ஒடுகிற சத்தம் கேட்கவே ‘அது ஒன்றுமில்லை; எலி ஒடுகிறது’ என்றார் மூத்த மாப்பிள்ளை.

வந்தவரில் ஒருவன் ‘அட தெரியாமல் போச்சே! காது குடைய அதிலே ஒர் இறகு பிடுங்கியிருக்கலாமே? என்றார்.

அது கேட்டு, அடுத்தவன் ஓயாமல் சிரித்தான். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதும், அவன் சொன்னான்,

“அந்த ஆள் ஓடினது உடும்பு’ என்று நினைத்து அப்படிச் சொல்கிறான். அதனால்தான் சிரித்தேன்’ என்றார்.

உடனே செல்வந்தர், “உங்கள் புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சினோம். மிக மிக நன்றி, நீங்கள் இருவருமே போய் வாருங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/88&oldid=962712" இலிருந்து மீள்விக்கப்பட்டது