பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

117



644.ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.

விக்டர் ஹூகோ

645.நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.

எமர்ஸன்

646.நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.

எமர்ஸன்

647.காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன்.

நீட்சே

648.சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை.

பழமொழி


29. செல்வம்

649.செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.

ஜாண்ஸன்