உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

123679.அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.

மில்ட்டன்

680.செல்வம் வேண்டுமா? செல்வத்திலுள்ள ஆசையை விட்டு விடு. அதுதான் செல்வத்தைப் பெருக்கும் வழி.

அகஸ்ட்டைன்

681.மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே.

கோல்ட்ஸ்மித்

682.செல்வம் என்பது ஆன்மா எரிந்து மிகுந்த சாம்பலே யாகும்.

பால் ரிச்சர்ட்

683.துர் அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட அதிர்ஷ்டத்தைத் தாங்குவதே அதிகக் கஷ்டமான காரியம்.

பால் ரிச்சர்ட்

684.செல்வம் என்பது சாத்தான் மனிதனை அடிமையாக்கும் சாதனம்.

பால் ரிச்சர்ட்

685.அசத்தியத்தை மறைக்கச் சத்தியத்தை நாடுவதுபோல், அசெளக்கியத்துக்கு வசதி செய்யவே செளக்யத்தைத் தேடுகிறோம்.

செஸ்ட்டர்டன்