பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அறிவுக்41 அதிர்ஷ்டம்

721. துர் அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட நல்ல அதிர்ஷ்டத்தைத் தாங்கவே அதிக ஆற்றல் தேவை.

ரோஷிவக்கல்டு

722.குற்றங்குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக் கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும்.

கதே

723.துர் அதிர்ஷ்டம் சிறியோரைப் புறங் கண்டுவிடும். ஆனால் பெரியோர் அதை வென்று விடுவர்.

வாஷிங்க்டன் இர்விங்

724.எப்பொழுது நாம் “அதிர்ஷ்டம்” எனும் தேவதையை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள்.

ஷேக்ஸ்பியர்

725.“வினைப்பயன்” என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும்.

மில்

726.அதிர்ஷ்டம் அடையும்வரை என்னை அறிவிலி என்று அழையற்க.

ஷேக்ஸ்பியர்