உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அறிவுக்




52. கல்வி


831. கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா.

மாஜினி

834.கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன்.

விக்டர் ஹூகோ

833.மனத்தில் நோயில்லையானால் கல்வி அவசியமில்லை.

அந்தோனி

834.சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும்.

மைக்கேல் ஆஞ்சலோ

835.கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.

மாஜினி

836.அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம்.

ஆவ்பரி

837.கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும்.

ரஸ்கின்