உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அறிவுக்


ரஸ்கின்

960.ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும்.

ஹோம்ஸ்

961. சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே.

ரஸ்கின்

962.நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும்.

ரஸ்கின்

963.நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும்.

அடிஸன்

964.நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும்.

ஜேமிஸன்

965.சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது.

கதே