இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
அறிவுக்
240. தத்துவ ஞானம் கற்பது என்பது, ‘தான்’ சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று.
ஸிஸரோ
241.தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.
ஷில்லர்
242.நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு.
ஷேக்ஸ்பியர்
243.ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும்.
வால்டேர்
244.உடல்-அது மண்ணேயன்றி வேறன்று; ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.
கல்வெர்வெல்
245.மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்ம சக்தியே யாகும்.
கார்லைல்