பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்
79
 


418. சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.

கார்லைல்

419. பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.

கார்லைல்

420.உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.

எமர்ஸன்

421.சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல்.

பர்க்

422.பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.

423.சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.

லாங்பெல்லோ

424.தமது உயர்வை அறியாதவரே சான்றோர்.

கார்லைல்

425.உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம்.

ஜார்ஜ் லாங்