பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முகவு ைர.

"அறிவுநூல் திரட்டு முதற் புத்தகமாகிய இது, பக்தி துால், நீதிநூல், இதிகாசம், புராணம், பிரபந்தங்கள், சங்கநூல்கள் முதலியவற்றிலிருந்து எடுத்துத் திரட்டிய இனிய செம்பாகமான பாடல்களைத் தன்னகத்துக் கொண்டு வெளிவந்துளது. இதனைக் கற்கும் மாணவர் கள் தமிழ்மொழி ஞானம், மாந்தர்க்குரிய நீதி, நல்லொழுக் கம் முதலியவற்றுள் சிறந்து விளங்குவார்கள் என்பதனை இதனேக் கண்ணுறும் அறிஞர்களே நன்கறிவாராதலின், இதுபற்றி விரித்துரைப்பது மிகையேயாகும். இப்புத்த கம் பொருள்விளக்கக் குறியிட்டுகளுடன் பதிப்பு முறை யும் சிறந்திருக்கிறது. இப்புத்தகம் (High School. form classes) உயர்தரகலாசாலை மாணவர்களது செய் யுட்பாடத்துக்குப் பெரிதும் பயன்படுவதாகும். கலாசாலை ஆசிரியர்கள் இந்நூலே நன்கு அபிமானித்து என்னை ஊக்கு வார்களென்று கம்புகிறேன்.

அமெரிக்கன் காலேஜ், இங்கனம்,

மதுர்ை. - .ஆ. கார்மேகக் கோன் ) .27 س3 س-3