பக்கம்:அறுந்த தந்தி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி 115

யில் எழுந்தவுடன் குழந்தைக்கு முதலில் காபி கொடுத்து விட்டுப் பிறகே அவர் உண்டது அதர்மமா? பார்வதியம்மா ளிடம் இந்தக் கேள்விகளை யார் கேட்பார்கள் ?

எப்படியோ அவள் உள்ளத்தின் ஒரு மூலையில் ஒரு பொறி விழுந்துவிட்டது. அது வாவாப் பற்றிக்கொண்டே வந்தது. ஒரு நாள் பரமேசுவரையரிடம், இனிமேல் இக் தப் பிச்சைக்காா நாய்களுடன் ஒரு கூAணமாவது சேர்ந்து இருக்கக்கூடாது. ஒன்று, அவர்கள் வேறு விடு பார்த்துக் கொள்ளட்டும். அல்லது நாம் வேறு விட்டுக்குப் போய் விடலாம்' என்று உத்தரவு போட்டாள். பரமேசுவரைய ருக்குச் சிரிப்பு வந்தது; அடக்கிக்கொண்டார். அவ்வளவு சிலபமாக இப்போதெல்லாம் வீடு கிடைத்துவிடுமா? இந்த வீட்டில் நம்க்கு இடம் கொடுத்திருக்கிறவர் ராமசாமி ஐயர். அவரே இந்த விடு முழுவதையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிருர். மைக்கு மலிவாக இந்த இடத்தைத் தந்தி ருக்கிருர். அவரைப் போகச் சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை. நம்மை வேண்டுமானல் அவர் போகச் சொல்லிவிட லாம்' என்று விஷயத்தை அவளுக்கு அவர் ஞாபகம் மூட்டினர். - "அப்படியாளுல் சரி; இன்றைக்கே கோட்டீசு கொடுத்துவிடுங்கள். நாலு ரூபாய் கூடப் போனலும் போகிறது; வேறு வீடு பார்க்கத்தான் வேண்டும். இல்லா விட்டால் வீட்டுக்காரச் செட்டியிடம் நீங்கள் நேரில்ே போய் வீடு முழுவதையும் கானே எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி இாண்டு ரூபாய் அதிகமாகச் சொல்லுங் கள். செட்டி வழிக்கு வந்துவிடுவான்.'

பரமேசுவரையர் காது கொடுத்துக் கேட்டார். கிதான மாகப் பதில் சொன்னர் :

'பார்வதியம்மாளவர்கள் தந்திரம் கன்முகத்தான் இருக்கிறது. ஆனல் அந்தச் செட்டியாருக்கு ராமசாமி ஐய ரிடம் உள்ள நம்பிக்கை என்னிடம் இல்லை. சும்மா கிடக் தாலும் சரி, ராமசாமி ஐயர் சொல்கிறபடிதான் நடப்பார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/122&oldid=535361" இலிருந்து மீள்விக்கப்பட்டது