பக்கம்:அறுந்த தந்தி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அறுந்த தந்தி

மூர்த்தி ஐயருக்கு உடம்பே தெரியவில்லை. அளவற்ற ஆனந்தத்தை அடைந்து ஹா! ஹா!' என்று குது கலித் தார். 'நீ சிரஞ்சீவியாக வாழவேண்டும். மிகவும் நன்மு யிருக்கிறது. ராக மூர்ச்சையை வெகு அழகாகக் காட்டி யிருக்கிருய். விரிபோணி வர்ணத்துக்கு ஈடு ஜோடில்லை என்று கினைத்தேன். இது பிரமாதமாக இருக்கிறது. கீர்த்தனமாகச் செய்திருப்பதிலேதான் உன்னுடைய சங் கீத ஞானமும் தமிழறிவும் நன்ருகத் தெரிகின்றன. தீர்க் காயுசாக இருக்கவேண்டும்!’ என்றபோது அவரை உணர்ச்சி தடைப்படுத்தியது. மேலே பேச முடியவில்லை. கண்களில் நீர் முத்துக்கள் அவர் உள்ளத்தில் பொங்கிய ஆனந்தக் கடலிலிருந்து எழுந்து தோன்றின. சிறிது நோம் அவர்களிடையே மெளனம் கிலவியது.

'ராமபத்திரா, ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று எண்ணினேன். எனக்கு என்னவோ அது குறையாக இருக்கிறது.’ -

ராமபத்திர சர்மா திடுக்கிட்டார். என்ன, என்ன?” என்று வேகத்தோடு கேட்டார். -

'ஒன்றும் இல்ல்ை, நீ சாகித்தியம் செய்கிருயே; இந்த அருமையான சாகித்தியங்களில் உன்னுடைய முத் திரை இருக்கவேண்டும்.'

'இதுதான? என் முத்திரை எதற்காக? நான் என்ன பெரிய காரியத்தைச் செய்துவிட்டேன்? எவ்வளவோ அருமையான காரியங்களையும் நூல்களையும் பல பெரிய வர்கள் தம்மைப் புலப்படுத்திக்கொள்ளாமலே செய்து விட்டுப் போயிருக்கிருர்கள். நம் காட்டுக் கலைஞர்களுக்குக் கலை வேறு, காம் வேறு என்ற கினேவே இல்லை. கலைப் பொருள் உள்ள வரையில் காம் இருப்பதாகவே அவர்கள் கருதுகிருர்கள். உண்மையும் அதுதான். இந்தப் பெயர், முத்திரை முதலிய சரக்கெல்லாம் வீண் விளம்பரம்; வியா பாா உலகத்துக்கே வேண்டும். விளம்பரம் அதிகமாக

ஆக, அது சாக்கின் குறைகளை மறைப்பதற்குச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/13&oldid=535253" இலிருந்து மீள்விக்கப்பட்டது