பக்கம்:அறுந்த தந்தி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அறுந்த தந்தி

இதே மாதிரி சங்கர்ப்பத்தில் நான் செய்ததை நீ கேட் டால் தெரியவரும். ஒரு நாள் என்னிடமிருந்த விணே யின் பிருடையை, ராகவன் - அப்போது குழந்தை - தொட்டுப் பார்த்துக்கொண் டிருந்தான். மத்தியான்னத் துக்கம் போட்டுவிட்டு மாடியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்தேன். அவனைப் பார்த்தேன். பிருடையை முறுக்கி ஒடித்துவிடுவானென்று எண்ணினேன். ஒன்றும் மேலே யோசிக்கவில்லை. கையிலிருந்த சாவிக் கொத்தை ஆத்திாக் தோடு வீசியெறிந்தேன். அது இரும்பல்லவா? அவன் தலையில் நன்ருகத் தாக்கிக் குபுகுபுவென்று ரத்தம் வந்து விட்டது. அப்புறம் சீப்பிடித்துக்கொண்டு காயம் ஆற மூன்று மாத காலம் ஆயிற்று. இப்போதும் அவன் தலே யில் தழும்பு இருக்கிறது. அவன் தலையில் மட்டும் அல்ல; என் மனசிலும் இருக்கிறது. இன்று உன் பொறு மையைப் பார்க்கும்போது என் அங்கமெல்லாம் சுருங்கி நானுகிறேன். நீ என்னவிட ஆயிரம் மடங்கு பெரியவன் எல்லாவற்றிலும்.’’

'ஏது, இன்று கணக்குக்கு மீறி ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள்ே! உங்கள் குழந்தை நான். உங்கள் குழந்தையை நீங்களே புகழ்ந்தால் உலகத்தார் நகைக்கமாட்டார்களா?’’

3

ஒரு விதமாக அந்தக் கலவரம் அடங்கியது. ஏழரை மணிக்குக் கீர்த்தனத்தை அரங்கேற்றுவது என்று சொல்லி விணக்குப் புதுத் தந்தி போட்டார் சர்மா. ஏழரை மணி வர எவ்வளவு நோம் ஆகப்போகிறது? முரு கனுக்கு நமஸ்காாம்_செய்து தம் குருநாதர் பாதத்தில் விழுந்து எழுந்து வினேயை எடுத்துவைத்து உட்கார் தார் அந்தச் சாகித்திய வித்துவான்.

கல்யாணி ராக ஆலாபனம் ஐந்து நிமிஷம் ஆயிற்று. பல்லவியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கும்போதே குரு மூர்த்தி ஐயருக்கு மயிர்க்குச்செறிந்தது. அது பல்ல்வி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/19&oldid=535260" இலிருந்து மீள்விக்கப்பட்டது