பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X உவம் இதனால் படைப்பாளிக்கு அதிகச் சுதந்திரம் கிடைத்தது. இலக் கியத்தில் புதிய உத்திகள் தோன்றின. தொல்காப்பிய வியலுக்குள் இவை அடங்கவில்லை. எனவே இவற்றை ஆராயத் தனியாக ஓர் இயல் தேவைப்பட்டது. அப்போது ஏற்பட்ட வடமொழியின் கூட்டுறவும் துணைக்காரணமாகத் தண்டியலங் காரம் பிறந்தது. தமிழில் அணியிலக்கணம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முகிழ்த்தது. இப்பிரிவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒன்று எனக் கொள்வதில் தவறில்லை. தமக்கெனக் கட்டுக்கோப்பான வடிவமைப்பைப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள் தமிழில் தோன்றியபோது பாட்டியல் நூல்கள் பிறப்பெடுத்தன. பாட்டியல் நூல்களிலும் இலக்கியம் கண்டு இலக்கணம் வகுக்காமல் சில கற்பனைகள் கலந்துவிட்ட தென்பது உண்மையே. எனினும் பாட்டியலில் வடமொழிச் செல்வாக்குக் குறைவே. ஆனால், கோதுமையை இறக்குமதி செய்யும்போது பார்த்தீனியக் களையும் சேர்ந்து இறங்கி விடுவதைப் போலத் தேவையற்ற 'பொருத்தவியல்' என்னும் ஒன்று அணியியலோடு சேர்ந்துவந்து பாட்டியலில் ஒட்டிக் கொண்டது. பாட்டியலும் பொருத்தவியலும் யாப்பிலக் கணத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன. இதுவே மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக விரிந்த வளர்ச்சியின் வகை. புலமை இலக்கணம் ஏன்? மிகப் பிற்பட்ட காலத்தில் தமிழக வரலாற்றில் பல மாற் றங்கள் ஏற்பட்டு விட்டன. தமிழ்ப் பண்பாட்டையும், கலை களையும் போற்றிப் பாதுகாத்து வந்த தமிழ் மன்னர்களின் ஆட்சி மறைந்தது. வடமொழி மட்டுமன்று; இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயிருந்து வந்த பல மொழிகளும் தமிழை ஒவ்வொரு வகையில் பாதித்தன. சான்றோனாதலும் இறைவன் திருவடியை யடைதலுமே கல்விப்பயன் என்னும் நிலைமாறிக் கல்வியும் ஒரு தொழிலாகிவிட்டது. 'வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே பாட்டிசைத்துப் போய்விற்கும் ' அவல நிலையைப் பல புலவர்களின் வரலாற்றில் காணலாம். சில சமயங்களில் தமிழ் படித்தவன் "தடமுலை வேசையராகப்