பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 எழுத்திலக்கணம் 145. ணமனலள ஒற்றொடு உயிர்மெய்ச் சகர பகரம் புணர்கால் மகரஒற்று ஒன்றே ஞகரஒற்று ஆயும் திரியாதும் நிற்கும்; மற்றவை ககரத் தால்என வயங்கும்; நஞ்சீர், நும்பா எனும்இரு மொழியும் நிரைபடும் உதாரணம் ஆகும்; அவற்றிற்கு மட்சால் விட்புலம் எனச்சில விரிக்கில் பெருத்துக் கெடும்எனப் பேசிலம் அன்றே. ண், ம், ன்,ல்,ள் ஆகிய நிலைமொழி ஈற்று ஒற்றுடன் சகர, பகர வருக்க உயிர்மெய்கள் புணருங்கால் மகரமெய் மட்டுமே முறையே ஞகர மெய்யாகத்திரிந்தும், திரியாமல் இயல்பாகவும் நிற்கும். நஞ்சீர், நும்பா என்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாம். மற்ற நான்கு மெய்களும் ககரத்திற்குத் திரிவதைப் போன்று திரியும். மட்சால், விட்புலம் என்பன போன்றவை இதற்கு உதாரணங்களாம் என்றவாறு. முன்னர்க் கூறப்பட்ட நன்னூல் விதிகளே இங்கும் சகர, பகரத்திற்குப் பிரித்துக் கூறப்பட்டன. உரையில் உதாரணம் விதிபற்றி இடம் மாற்றியமைக்கப்பட்டது. (145) 146. ணகர ஒற்று நகரஉயிர் மெய்வரின் தனது உயிர் மெய்யாய்ச் சாரச் செய்யும்; பெண்ணாகம் எனும்சொல் பிறங்குஉதா ரணமே. நிலைமொழி ஈற்றில் உள்ளனகரமெய்வருமொழி முதலாகிய நகர வருக்க உயிர் மெய்யுடன் புணர்ந்தால் அவ்வுயிர்மெய்யை யும் னகரமாக்கும். பெண்ணாகம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு. குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரம் திரிந்துழி நன்ணும் கேடே" எனப் பவணந்தியார் தனிக்குறில் அடுத்த ணகரம், தொடர்மொழியீற்று நகரம் எனப் பாகுபாடு செய்து 1 நன்னூல் 210