பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார், தேவகோட்டை வன்றொண்டன் செட்டியார், சங்கரதாச சுவாமிகள் ஆகிய பெரும்புலவர்களோடு வண்ணச்சரபம் சுவாமிகள் தொடர்பு கொண்டிருந்தார் எனத் தெரியவருகிறது. சீடர்கள் வண்ணக்களஞ்சியம் நாகலிங்க 'முனிவர், கோபாலசமுத் திரம் சண்முகதாச பிள்ளை (மருகர்), சித்திரபுத்திர பிள்ளை (தம்பி), உரத்தூர் சின்னுரெட்டியார், தி. மு. செந்தினாயகம் பிள்ளை (மகன்), நெல்லை அருணாசலத் தொண்டைமான், கழுகுமலை இராமகிருஷ்ண பிள்ளை, ஊற்றுமலை கந்தசாமிப் புலவர், சோழவந்தான் கந்தசுவாமி சாமிகள் முதலியோர் இவரிடம் தமிழ் பயின்றதாகத் தெரிகிறது. இவர்களுள் சிலர் இவர்பால் சந்த இலக்கணம் மட்டும் கற்றனர் என்றும் அறியப் படுகிறது. உபதேச பரம்பரை இவர்பால் மந்திரோபதேசம் பெற்ற அடியவர்களுள் தலைசிறந்தவர் சிரவை யாதீனத்தாபகர் திருவருட்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் ஆவார்கள். இச் சுவாமிகளின் தலைமாணாக்கரும் கொங்குநாட்டுக் கச்சியப்ப முனிவர் எனப் படுபவருமாகிய அருட்பெருந்திரு. சிரவை. கந்தசாமிசுவாமிகள் இவ் வாதீனத்தின் இரண்டாம் பட்டத்தை அலங்கரித்தவர் ஆவார்கள். இப்போதைய சிரவை யாதீனகர்த்தர் சுந்தர சுவாமிகள் அவர்களும், திருப்பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களும் இந்தக் கந்தசாமி சுவாமிகளின் திருக்கண்ணோக்கம் பெற்ற சீடர்களே. இந்த ஞானபரம்பரை யால் தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் சிறப்பு தமிழ்கூறு நல்லுலகை வந்தடைகிறது. ஸ்ரீலஸ்ரீ வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தன் வரலாற்றைக் குருபரதத்துவம் எனப் பாடியுள்ளார். அவர் மகனார் திரு. செந்தினாயகம் பிள்ளையவர்கள் சற்று விரித்து ஸ்ரீதண்டபாணி விஜயம் எனப் பாடியுள்ளார். இவை பதிப்பாகியுள்ளன. இக்